டிஜிட்டல் மோசடிகள் – வங்கிக் கணக்குகள் கையாள்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை நான்கு வாரங்களில் வகுக்க வேண்டும் ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 6- டிஜிட்டல் மோசடிகளில் தொடர்புடைய வங்கிக் கணக்குகளைக் கையாள்வ தற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 4 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: போலி வங்கிக் கணக்குகள், பண மோசடி மற்றும் இணையவழி மோசடிகளுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளைக் கையாள் வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை நான்கு வாரங் களுக்குள் ரிசர்வ் வங்கி தயாரித்து வழங்க வேண்டும்.

டிஜிட்டல் கைது முறைகேடு விவகாரத்தில் குறைதீர்ப்பு, பண மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும், விசாரணை அமைப்புகளும், சட்ட அமலாக்க முகமைகளும் மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் மோசடி குறித்து புகார் அளிக்க பொது மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மாநில அரசுகளும் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மய்யங்களை அமைக்க வேண் டும். இ-ஜீரோ எப்.அய்.ஆர் வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். டிஜிட்டல் மோசடி தொடர்பான வங்கிக் கணக்குகளை விரைந்து முடக்க வேண்டும். மோசடி செய்யப்பட்ட பணத்தை விரைந்து மீட்க வேண்டும். வங்கிக் கணக்கு முடக்க வழக்குகளின் விசார ணையை எளிதாக்க வேண்டும்.

டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு பெறுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக சிபிஅய் விசாரணை மேற்கொள்ள வரையறுக்கப்பட்டுள்ள ரூ.10 கோடி என்ற வரம்பைக் குறைக்க வேண்டும். டிஜிட்டல் மோசடி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செப். 16க்குள் அனைத்து மாநில அரசுகள், ஒன்றிய அரசு, சிபிஅய் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *