திருப்பத்தூர் பெ. கலைவாணன்
அன்றாடம் நாம் உயிர் வாழ்வதற்காக உண்ணும் உணவு தானியங்கள், காய்கறிகள் எனப் பல பொருள்களின் விலைகள் அண்மைக்காலமாக மிக வேகமாக உயர்ந்து வருகின்றன. அதிலும் அரிசியின் விலை நூறு ரூபாயை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நாள்தோறும் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வதுபோல், அரிசியின் விலையும் நிர்ணயம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த விலையைக் கட்டுப்படுத்த முடியாத அரசு, மானிய விலையில் சன்னரக அரிசியைப் பொது விநியோக அங்காடிகளில் வழங்குகிறோம் என்ற பெயரில், அதே அங்காடிகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியையே பாலிஷ் செய்து ரூ. 30-க்கு விற்பனை செய்து கொண்டி ருக்கிறார்கள்.
இப்படியாக, சாமானிய மக்களின் உணவுப் பொருள்க ளின் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது உயர்ந்துள்ளதையும், இதனால் மக்கள் பாதிப்புக்குள்ளாவதையும் எவ்வித அரசியல் சார்புமின்றிப் பொதுநல நோக்கத்தோடு விமர்சனம் செய்தாலும், விமர்சிப்பவர்களையும் கைது செய்து, அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். இத்தகைய ஆட்சியை “அசல் பாசிசம்”, “அதிகார மமதை” என்று கண்டித்தார் ஆசிரியர் அவர்கள்.
இப்படியான நிலையில் நாடு சென்று கொண்டி ருக்கும்போது, இந்த விலைவாசி உயர்வு, நாட்டின் நிலைமை ஆகிய எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல், பக்தியின் பேரில் பல டன் அரிசியைச் சாதமாக வடித்து ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து உணவுப் பொருள்களை வீணடித்துக் கொண்டிருக்கிறது பகுத்தறிவற்ற (பார்ப்பன) மூடர் கூட்டம்.
ஆம், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் (சோழீஸ்வரர்) திருக்கோவிலில், அய்ப்பசி பவுர்ணமி நாளை முன்னிட்டு டன் கணக்கில் பச்சரிசிச் சாதம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. (இது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு).
கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள சிவலிங்கம் சுமார் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட உலகிலேயே மிகப் பிரம்மாண்டமான லிங்க வடிவம் என்கிறார்கள். (இந்த லிங்கத்தின் வடிவம் எதைக் குறிக்கிறது என்பது தனிக்கதை!) இவ்வளவு பெரிய லிங்கத் திருமேனி முழுவதையும் பச்சரிசிச் சாதத்தால் மூடி அன்னாபிஷேகம் செய்யச் சுமார் 2,000 கிலோ முதல் 3,000 கிலோ (3 டன்) வரை பச்சரிசிச் சாதம் பயன்படுத்தப்படுகிறது. (கடவுளை வணங்கும் ஏழை மக்களுக்கு உண்பதற்கு ரேஷன் அரிசி; இந்தக் கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பச்சரிசி!)
அந்த லிங்கத் திருமேனியை அன்னத்தால் மூடிய பிறகு, அதன் மேல் காய்கறிகள், கனிகள் மற்றும் மலர் மாலைகளைக் கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரித்து மகா தீபாராதனை காட்டி வழிபடுகிறார்கள்.
அரிசி விலை விண்ணைத் தொடும் நிலையில், அதைப் பற்றியும் அக்கறையின்றி, பொறுப்பின்றி, கவலை யின்றி, விண்ணை முட்டி நீண்டு கொண்டிருக்கும் லிங்கத்திற்கு அரிசிச் சாதத்தை வடித்துக் கூடை கூடையாக அபிஷேகம் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, அந்த அரிசிச் சாதக் கூடையைப் பார்ப்பனர்கள் மட்டும்தான் தூக்க வேண்டுமாம். இது ஆகம விதியாம்! அவர்களே நீண்ட வரிசையில் நின்று, ஒருவருக்கொருவர் கைகளை மாற்றி, கருவறை வரை சாதத்தைக் கொண்டு சென்று, அங்கே லிங்கத்தைச் சுற்றியிருக்கும் தடுப்புக்குள் கொட்டி, லிங்கத்தைச் சாதத்தால் மூடுகிறார்கள். இந்த முட்டாள்தனமான பொம்மை விளையாட்டை ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கை கொண்ட கூட்டம் கைகூப்பிக் கும்பிட்டு வணங்கி, கடவுளுக்குப் படைத்ததை வாங்கித் தின்னக் காத்திருக்கிறது.
இப்படி, சிறிதும் பொதுஅறிவின்றிக் கடவுளின் பெயரால் இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் இல்லாத கடவுளுக்காகப் பாழாக்கப்படும் உணவுப் பொருள்களின் மதிப்பு கொஞ்சநஞ்சமா? பால், தயிர், வெண்ணெய், நெய், தேங்காய், அரிசிச் சாதம், தேன், பலா போன்ற பழ வகைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவில் சுமார் 8 முதல் 10 லட்சம் வரை கோயில்கள் இருப்பதாகக் “கூகுள்” கணக்கு சொல்கிறது. இந்தக் கோயில்களில் குடிகொண்டிருக்கும் கடவுளுக்கு அபிஷேகம் என்ற பெயரில் வீணாகும் உணவுப் பொருள்களின் மதிப்பை ஆண்டுக்கு எனத் தோராயமாகக் கணக்கிட்டால் ரூ. 2,000 கோடிக்கு மேல் வரும். இது உணவுப் பொருள்கள் வீணாகும் கணக்கு மட்டும்தான். (தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளில் வீணாகும் செலவுக் கணக்கு தனி!)
ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, வறுமை; மறுபக்கம், தன்னைக் காப்பாற்றுவதாக நினைக்கும் கடவுளுக்காக இத்தனை வீண் செலவு!
இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் கடவுளோ, இந்த விலைவாசியைக் குறைத்தால் பரவாயில்லை. இதை யெல்லாம் அனுபவித்துக்கொண்டு (அதுவா அனுபவித்துக் கொண்டிருக்கிறது? அதன் பெயரில் மனிதர்கள்தானே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்!) விலைவாசியைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பார்த்தும் திருந்தாத முட்டாள் கூட்டங்கள் திருந்துவது எப்போது?
இந்துமதப் பண்டிகைகள், சடங்குகள், கொண்டாட்டங்கள் என்றாலே உணவுப் பொருள்களை வீணடித்தல், இயற்கையை மாசுபடுத்துதல், நீர்நிலைகளை விஷமாக்குதல் என்று பஞ்சபூதங்களுக்கும் அழிவுதானா?
ஒவ்வொருவருடைய நம்பிக்கையையும் மதிப்பதுடன், உணவின் மதிப்பையும், மனித உயிரின் மதிப்பையும் காப்பது சமூகத்தின் கடமை. இப்படி வீணாகும் உணவுப் பொருள்களைக் குழந்தைகளின் கல்விக்கும் ஊட்டச்சத்துக்கும் பயன்படுத்தக்கூடாதா?
உணவுப் பொருள்கள் வீணாகாமல் இருக்க விதி முறைகளைக் கொண்டுவர முடியுமா? ஆயிரம் கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.
தந்தை பெரியார், “மனிதனுக்குப் பக்தி வந்தால் புத்தி போய்விடும்” என்று சொன்னது எவ்வளவு உண்மை! பகுத்தறிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்திலும் இத்த கைய செயல்கள் வெட்கக்கேடு! வேதனை!
இந்த மனிதச் சமூகத்தை இன்னும் தீவிரமாகப் பகுத்தறிவுப் பாதைக்குத் திருப்புவோம்; தந்தை பெரியாரது துணைக்கொண்டு!
