லக்னோ, நவ.12 உத்தரப்பிரதேசத்தில் பிணை வழங்கப்பட்டும், நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் அல்லது உத்தர வாத பத்திரம் சமர்ப்பிக்க இயலாமல் சிறையில் உள்ள கைதிகளை அடையாளம் கண்டு விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றங்கள் பிணை வழங்கினாலும், அதற்கான பிணைத் தொகையை செலுத்த முடியாதது உட்பட பல்வேறு காரணங்களால் விசாரணை கைதிகள் சிறையிலேயே காலம் தள்ளும் நிலை நாடு முழுதும் நிலவுகிறது. உத்தர பிரதேசம் மாநிலத்திலும், இதுபோல் ஆயிரக்கணக்கான கைதிகள் சிறையில் அடைப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர் பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா பி. வராலே அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் விபரம்:
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவலின்படி, உ.பி.,யில் 20 மாவட்டங் களில் மட்டும் பிணை பெற்ற 264 கைதிகளில் 158 பேர் மட்டுமே விடுவிக் கப்பட்டுள்ளனர்; மீதமுள்ள 106 பேர் உத்தரவாதப் பத்திரம் போன்ற நிபந் தனைகளை நிறைவேற்ற முடியாத கார ணத்தால் இன்னும் சிறையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானது.
எனவே, உ.பி.,யில் உள்ள 75 மாவட் டங்களிலும் பிணை கிடைத்தும் சிறையிலிருந்து வெளிவராத விசா ரணைக் கைதிகளை அடையாளம் காணும் பணியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். தனியார் வழக் குரைஞர்களை அமர்த்தியிருந்தாலும் சரி அல்லது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உதவியைப் பெற் றிருந்தாலும் சரி, அனைத்து விசாரணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
இதில் எத்தகைய பாகுபாடும் காட்டப்படக்கூடாது. இதுபோன்ற சரிபார்ப்பு பணிகள், பிற மாநிலங்களிலும் மேற்கொள்ள வேண்டும். கைதிகளைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்கான முழு பொறுப்பும் அந்தந்த மாநில அரசுகளையே சாரும். சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றங்கள், இது போன்ற வழக்குகளை உடனடியாக எடுத்துக்கொண்டு, கைதிகள் எளிதில் வெளியேறும் வகையில் பிணை நிபந் தனைகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
