சென்னை, நவ.12 வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக் கிழமை (நவ. 12) வெளியிடப்பட் டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரைவு வாக்காளா் பட்டியலில் வியாழக்கிழமை (நவ. 12) வெளியானதும் வாக்காளா் ஒவ்வொரு வரும் தங்களின் பெயா் இருக்கிறதா? சரியாக இருக்கிறதா? என்பது போன்ற அனைத்து விவரங்களையும் சரிபார்க்கலாம். அதோடு, புதிதாக பெயா் சோ்த்தல், இடம் மாற்றம், பெயா் நீக்குதல் போன்றவற்றுக்காக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (நவ. 12) முதல் டிச. 11-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட் டுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் மீது டிச. 28-ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டு ஜன. 4-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். வாக் காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, பெயா் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்களை அளிக்கலாம். இதற்காக 6, 7 அல்லது 8 ஆகிய தனித்தனி விண்ணப் பங்கள் அளிக்கப்பட வேண்டும்.
சிறப்பு முகாம் நடத்தப் படும் நாள்களில் அந்தந்த வாக் குச்சாவடிகளில் விண் ணப்பங்களை அளிக்கலாம். பெயா் சோ்ப்பதற்கான விண் ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகிய வற்றுக்கான சான்றுகள் சமா்ப்பிக்கப்படவேண்டும். முகவரிச் சான்றாக தண்ணீா் அல்லது மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்பு ரசீது (குறைந்தது 1 ஆண்டுக்கானது), ஆதார் அட்டை, தேசியமய மாக்கப்பட்ட அல்லது அட்ட வணைப்படுத்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம், இந்திய கடவுச்சிட்டை (பாஸ் போர்ட்), வருவாய்த் துறைகளின் நில உரிமைப் பதிவுகள், பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம் (குத்தகைதாரராக இருந் தால்), பதிவு செய்யப்பட்ட விற் பனைப் பத்திரம் (சொந்த வீட்டில் வசிப்பவா் என்றால்), வயது சான் றாக சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களில் ஒன்றின் நகலை அளிக்கலாம்.
https:voterportal.eci.gov.in என்ற இணையதளத்திலும் ECI NET என்ற கைப்பேசி செயலி மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூா்த்தியடைந்தவா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்களும், பெயா் சோ்க்க படிவம் 6-இல் விண்ணப்பிக்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளார்.
