மாணவர்களுக்கு வழங்கும் உணவுத் திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டாமா? பூவிருந்தவல்லியில் பல்லி இறந்து கிடந்த உணவை உண்ட மூன்று பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பூவிருந்தவல்லி, ஆக. 25- பல்லி விழுந்து கிடந்த உணவை சாப்பிட்ட 3 பள்ளிகளின் 19 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மாங்காடு பகுதியில் உள்ள தனியார் கேட்டரிங் நிறுவனம் தயாரிக்கப்பட்டு, மாங்காடு, குன்றத்தூர், பூவிருந்தவல்லி, திருமழிசை பகுதிகளில் உள்ள 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் உணவுக் கூடத்தில் நேற்று (24.8.2026) காலை உணவாக பொங்கல் தயாரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. முதலில் பூவிருந்தவல்லி-சிவன்கோயில் தெருவில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு வழங்கப்பட்டது. அதை மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் அதில் பல்லி இறந்துகிடந்தது தெரியவந்தது. அந்த உணவை சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு லேசான வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் பூவிருந்தவல்லி வரதராஜபெருமாள் கோயில் பின்புறம் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 7 பேரும், கீழ்மாநகர் அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவி என 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..

சிகிச்சை பெற்று வந்த 19 பேரும் மாலையில் பத்திரமாக வீடு திரும்பினர். தொடர்ந்து பல்வேறு துறைகளின் அதிகாரிகள் குறிப்பிட்ட பள்ளிகளிலும், உணவு தயாரிப்பு கூடத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிகளில் வழங்கப் பட்ட உணவு மாதிரி கள் கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு சேதனைக் காக அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் தவறுகள் இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *