சென்னை, ஏப். 4- ‘தி.மு.க. திராவிட மாடல் 2.0′ தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்! என்ற தலைப்பில் நேற்று (3.4.2026) மாலை சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக இச்சிறப்புத் கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி திராவிடர் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்-ஏன்?’ என்ற நூலை வெளியிட்டு தொடக்கவுரையாற்றினார்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரையாற்றியும், நிறைவாக நன்றியும் தெரிவித்தார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் வெளியிட்ட நூலை புலவர் க.வீரமணி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், கு.திவாகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பேராசிரியர் க.பெரியார்செல்வி, நெய்வேலி வெ.ஞானசேகரன், மு.ரா.மாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இந்நூலைப் பெற்றுக் கொண்டனர்.
இச்சிறப்புக் கூட்டத்திற்கு திரா விடர் கழகப் பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ், எமரால்டு கோ.ஒளி வண்ணன், திராவிடர் கழக கிராமப்புற பிரச்சார அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், பிராட்லா, பேராசிரியர் தேவதாஸ், சி.காமராஜ், திண்டிவனம் சிறீராமுலு, கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழககுரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மற்றும் தமிழ்நாடு மூதறிஞர் குழு, புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் நூலக வாசகர் வட்டம், பகுத்தறிவாளர் கழகம், ஆகிய அமைப்புகளின் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
‘தி.மு.க. திராவிட மாடல் 2.0’ தேர்தல் அறிக்கையும் பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்! சிறப்புக் கூட்டம் – தமிழர் தலைவர் உரையாற்றினார் திராவிட மாடல் ஆட்சி தொடரவேண்டும் ஏன்? – நூல் வெளியீடு
Leave a Comment

