அங்காரா, நவ.11 இதுவரை பதிவான மிக வெப்பமான நான்கு ஆண்டுகளில் 2026-ஆம் ஆண்டும் ஒன்றாக இருக்கும் என உலக வானிலை ஆய்வு மய்யம் (WMO) தெரிவித்துள்ளது.
துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்றுவரும் அய்க்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டில், ‘காலநிலை குறித்த அறிக்கை’ என்ற முக்கிய ஆவ ணத்தை உலக வானிலை ஆய்வு அமைப்பு வெளியிட் டுள்ளது. இந்த புதிய அறிக்கையின் மூலம் புவி வெப்பமயமாதலின் தாக்கம் மேலும் தீவிரமடைந்து வருவது உறுதியாகியுள்ளது.
வெப்பநிலை உயர்வு
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில், உலகளாவிய சராசரி வெப்பநிலை என்பது தொழில் மயமாதலுக்கு முந்தைய காலத்தை விட (1850–1900 கால கட்டச் சராசரி) 1.47 டிகிரி செல் சியஸ் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
ஒப்பீடு
இந்த உலகளாவிய சராசரி வெப்பநிலையானது, கடந்த 2025 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளின் முழு ஆண்டு சராசரியை விட அதிகமாக உள்ளது. அதேசமயம், வரலாற்றில் இதுவரை பதிவான மிக வெப்பமான ஆண்டான 2024-இன் சராசரியை விட இது சற்று குறைவாகக் காணப்படுகிறது.
தற்போது நிலவி வரும் ‘எல் நினோ’ (El Nino) நிகழ்வின் வெப்பமூட்டும் விளைவுகள் காரணமாக, நடப்பாண்டு 2026-இன் இறுதிக்குள் உலகளாவிய வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று உலக வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது. உலக நாடுகள் உடனடியாகக் கடுமையான காலநிலை நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த அறிக்கை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
