லண்டன், நவ. 11- பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது நாகாலாந்திலிருந்து கொண்டு சென்ற 39 நாகா பழங்குடியின முன்னோரின் உடல் எச்சங்களை, இங்கிலாந் தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் முறைப்படி திருப்பி ஒப்படைத்துள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் கடந்த 9ஆம் தேதி அன்று இந்த ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற்றது. அருங்காட்சியக இயக்குநர் பேராசிரியர் லாரா வான் ப்ரோகோவன் முன்னிலையில், அதிகாரப் பூர்வ ஆவணங்களில் கையெழுத்திடப்பட்டு இந்த எச்சங்கள் ஒப்படைக் கப்பட்டன. இவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நாகா நல்லிணக்கத்திற்கான மன்றம் மற்றும் நாகா பழங்குடியினர் அமைப்பு களைச் சேர்ந்த சுமார் 30 பிரதிநிதிகள் இங்கிலாந்து சென்றிருந்தனர்.
கடந்த 1910 முதல் 1940 வரையிலான பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஜான் ஹென்றி ஹட்டன் மற்றும் ஜேம்ஸ் பிலிப் மில்ஸ் ஆகிய பிரிட்டிஷ் நிர்வாகிகள் மற்றும் மானுடவியலாளர்களால் இந்த எச்சங்கள் (பெரும் பாலும் மண்டை ஓடுகள்) நாகாலாந்திலிருந்து சேகரிக் கப்பட்டன. இவற்றில் பல, காலனித்துவ ராணுவ நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப் பட்டவை என்பதை அருங்காட்சியகம் ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் தனது காட்சிப்படுத்தலில் இருந்து அனைத்து மனித எச்சங்களையும் அகற்றியது. அதைத் தொடர்ந்து, முன்னோரின் எச்சங்களைத் தாயகம் மீட்டுக் கொண்டு வர நாகா அமைப்புகள் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. மொத்தம் 40 எச்சங்கள் கோரப்பட்ட நிலையில், நாகா சமூகத்தைச் சேர்ந்தவை என உறுதிப் படுத்தப்பட்ட 39 எச்சங்களைத் திருப்பி அனுப்ப ஜூலை 2026இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழு ஒப்புதல் அளித்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்நிய மண்ணில் இருந்த முன்னோரின் எச்சங்கள், இங்கிலாந்திலிருந்து விமா னம் மூலம் நாகாலாந்தின் திமாபூருக்குக் கொண்டு வரப்படுகின்றன. அங்கு புதிதாக அமைக் கப்பட உள்ள கூட்டு நினைவிடத்தில், பழங்குடியினரின் வழக்கப் படியும் மற்றும் அரசு மரியாதையுடன் இவை அனைத்தும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட உள்ளன.
