பெரம்பலூர், நவ. 11– பெரம்பலூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் 9.11.2026 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு காப்பாளர் அக்ரி.ஆறுமுகம் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று, சுயமரியாதை நாளான டிசம்பர் 2அன்று சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் குடும்பம், குடும்பமாக பங்கேற்று வாழ்த்தி மகிழவேண்டுமென கேட்டுக் கொண்டார்.
தமிழர் தலைவரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக 94 விடுதலை சந்தா வழங்குவதென்றும், டிசம்பர் 2இல் குடும்பத்தோடு நேரில் வாழ்த்துவது என்றும், வாழ்வியல் சிந்தனைகள் 20ஆம் பாகம் நூல் அறிமுகவிழா நடத்துவதென்றும் முடிவுசெய்யப்பட்டது.
திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், காப்பாளர் அக்ரி.ஆறுமுகம், மாவட்ட ப.க. தலைவர் முனைவர் எசனை பெ.நடராசன், மாவட்ட ப.க. செயலாளர் சு.இராமு, மாவட்ட துணைத்தலைவர் இரா.சின்னச் சாமி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பா.காளிதாசு, மேனாள் நகர்மன்ற உறுப்பினர் த.வின்சென்ட், பெரியார் பெருந்தொண்டர் அறங்கய்யா, சி.கிருபாலன் ஆகியோர் தமிழர்தலைவர் அவர்களின் பேருழைப்பை நன்றிப் பெருக்கோடு எடுத்துரைத்துத்தார்கள்.
11.10.2026இல் அன்று மாவட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற குடும்ப விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
14.11.2026 அன்று தஞ்சாவூரில் நடைபெறவுள்ள தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங் களை செயலாக்குவது என முடிவு செய்யப்பட்பது.
டிசம்பர் 2இல் 94ஆம் பிறந்தநாள் காணும் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் பரிசாக 94 விடுதலை சந்தாக்களை பரிசாக வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரியர் அய்யாவின் வாழ்வியல் சிந்தனைகள் 20 ஆம் பாகம் நூல் அறிமுக விழாவினை ஒன்றியத் தலைநகரங்களிலும் என முடிவு செய்யப்பட்டது.
