மடப்புரம் அஜித் குமார் வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும்! விசாரணை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் ஆணை!

- Advertisement -

மதுரை, நவ. 5- மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவல் மரணம் வழக்கை 9 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், நகைத் திருட்டு தொடர்பான புகாரில் தனிப்படை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார். சிபிஅய் வழக்கை விசாரித்து 6 தனிப்படை காவலர்களை கைது செய்தது.

மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் கூடுதல் குற்றப்பத்திரிகையில் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நாளில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், கைது நடவடிக் கையை ரத்து செய்யக்கோரி 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்தும், அஜித் குமார் வழக்கை 9 மாதங்களில் விசாரித்து முடிக்கவும் நீதிபதி முருகன் நேற்று முன்தினம் (3.11.2026) உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *