பட்டாசு வெடித்ததில் 834 குழந்தைகள் உள்பட 1,464 பேருக்கு கண் பாதிப்பு! மருத்துவமனை தகவல்

2 Min Read
- Advertisement -

மதுரை, நவ. 11- “தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்ததில் 834 குழந்தைகள் உள்பட 1,464 பேரின் கண்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இதில், 2 மாத கைக்குழந்தை உள்பட 8 பேரின் பாதிக்கப்பட்ட ஒரு கண் முழுமையாக பார்வையை இழந்துள்ளது” என மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மண்டல மனிதவள இயக்குநரும், கண் மற்றும் சீரமைப்பு அறுவை சிகிச்சைத் துறை தலைவருமான ஆர்.உஷா கூறியதாவது:

“தீபாவளியன்று வீடுகளில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச் சியை வெளிப் படுத்துவர். சில வீடுகளில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகள் காரணமாக, அந்த சந்தோஷம் சில மணி நேரம் கூட நீடிப் பதில்லை.

கை, கால்கள், கண்களில் பட்டாசு விபத்துகளால் பாதிப்பு ஏற்பட்டு அனைவரும் சோகத்தில் மூழ்கி விடுவர். அதனால், ஒவ்வொரு ஆண்டும், மிகுந்த பாதுகாப்புடனும், விழிப்புடனும் பட்டாசு வெடிக்க பொது மக்களை எவ்வளவுதான் அறிவுறுத் தினாலும் வெடி விபத்துகளை தவிர்க்க முடியவில்லை.

பட்டாசு கையாளும் போது மிகுந்த பாதுகாப்பு தேவை. பாதுகாப்பான தீபாவளி, பெற்றோர் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க வைப்பது போன்ற விழிப்புணர்வை அரவிந்த் கண் மருத்துவ மனை ஒவ்வொரு ஆண்டும் ஓர் இயக்கமாக கிராமங்கள், நகரங்கள் வேறுபாடில்லாமல் மேற்கொண்டுள்ளோம். ஆனாலும், நடப்பாண்டு பலர் பட்டாசு வெடி விபத்தால் கண் பார்வை பாதிப்புக் குள்ளானது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைகளுக்கு கடந்த 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பட்டாசு வெடித்தபோது விபத்துகள் ஏற்பட்டு 1,464 பேர் கண்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளனர். இவர்களில் 2 மாத குழந்தை உள்பட 834 பேர் (57 சதவீதம்) குழந்தைகள் என்பது அதிர்ச்சியான தகவலாக உள்ளது. அதில் 151 பேர் (10 சதவீதம்) 5 வயதுக் குட்பட்டவர்கள். மேலும், வேடிக்கை பார்த்தவர்களில் 624 பேர் (42 சதவீதம்) பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் மட்டும் பட்டாசு வெடித்ததில் 263 பேரின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் ஒரு கர்ப்பிணி, 2 மாதக் குழந்தை உள்பட 8 பேருக்கு ஒரு கண்ணில் முழுமையாக பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த பட்டாசு வெடி விபத்துகளில் 710 பேர் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில், பிஜிலி வெடியால் 174 பேர், கம்பி மத்தாப்பு வெடியால் 168 பேர், பூ மத்தாப்பு வெடியால் 153 பேர், ராக்கெட் பட்டாசு வெடியால் 92 பேர், தரைச்சக்கரம் வெடியால் 58 பேர் பாதிக்கப்பட்டனர். இனி வரும் காலங்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கண்களை பாதுகாப்போம்” என்று அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *