வாக்குறுதிகளை நிறைவேற்றாத தவெக அரசு சென்னையில் செப்டம்பர் 01 முதல் விவசாயிகள் உண்ணாநிலை மற்றும் காத்திருப்புப் போராட்டம்!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.22- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன் தவெக தேர்தல் அறிக்கையில், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தவெக அரசைக் கண்டித்தும், கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன்பு தொடர் உண்ணாநிலை மற்றும் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் விவசாயி கள் வாங்கிய பயிர்க் கடனை தமிழ்நாடு அரசு முழுமையாக தள்ளுபடி செய்யாத நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர் பாக, பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் நேற்று (21.8.2026) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் முருகேசன் தலைமை தாங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், உழவர் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, கிஸான் மஸ்தூர் மோர்ச்சா, தமிழ்நாடு கள் இயக்கம், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம், திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 15 அமைப்புகள் கலந்துகொண்டன.

இந்தக் கூட்டத்தின் முடிவில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் ஈசன் முருகசாமி செய்தி யாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

தவெக சார்பில் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றக்கோரி செப்டம்பர் 1 முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற தொடர் உண்ணாநிலைப் போராட்டத்திலும், காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபடுவதென முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு நிபந்தனைகள் விதிப்பது கண்டிக்கத் தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேவையில்லாத, கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பயன்பெறும் திட்டங்களை நீக்கிவிட்டு, ஆடம்பர செலவைக் குறைத்து விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிசெய்யக் கோரியதாகவும், ஆனால், அந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகையால், வரும் செப்டம்பர் 1 அன்று அனைத்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த 50 விவசாயிகள் தொடர் உண்ணாநிலைப் போராட் டத்திலும், 02 ஆயித்துக்கும் அதிக மான விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபடுஉள்ளதாக அறிவித்துள்ளார். அங்கு அறவழியில் போராட அரசு அனுமதி மறுத்தால், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவுடன், எங்களை அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை களை நிறைவேற்றுவதாக கூறினர். ஆனால், கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், இந்த முறை எங்களை யாரும் அப்படி ஏமாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *