முஸ்தபா கமால் பாட்சா நினைவு நாள் இன்று (10-11-1938)
“மசூதிகளையெல்லாம் கல்வி நிறுவனங்களாக் குங்கள், மதம் என்பது வீட்டிற்குள்ளே வைத்து கொள்ளுங்கள்” என்று புரட்சி முழக்கம் எழுப்பிய முஸ்தபா கமால் பாட்சா 1938 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாளில் மறைவுற்றார்.
முஸ்தபா கெமால் அட்டாதுர்க் என்று அழைக்கப் பட்ட முஸ்தபா கமால் பாட்சா துருக்கியின் இராணுவ அதிகாரி, புரட்சிகர பகுத்தறிவு சிந்தனை கொண்ட அரசியல்வாதி, நவீன துருக்கியை உருவாக்கிய சிற்பியுமாவார். அவர் 1923 முதல் 1938 இல் இறக்கும் வரை துருக்கியின் முதல் குடியரசுத் தலைவராகப் பணியாற் றினார். ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர் துருக்கியை நவீனமயமாக்கி, நவீன குடியரசு நாடாக மாற்றினார்.
சீர்திருத்தங்கள் பழைமை வாதத்தில் மூழ்கியிருந்த துருக்கியை 15 ஆண்டுகளுக்கு முழுமையான பகுத்தறிவு மற்றும் நவீன சிந்தனைக்கு இலக்கான ஒரு நாடாக மாற்றினார்.
‘‘மதம் மற்றும் நம்பிக்கை எல்லாம் அவரவர்கள் வீட்டிற்குள்ளேயும் பொது வெளியில் நமது நாட்டின் வளர்ச்சியும் தான் முக்கியம்’’ என்று கூறிய அவர் பல்வேறும் வழிபாடுத்தலங்களை உயர்கல்வி நிறுவனங்களாகவும் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் மாற்றியதால் அந்த நாடு மேலை நாடுகளோடு வளர்ச்சியடைந்த யுரோசியாவின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது, மேலும் இஸ்லாமிய நாடு என்று முத்திரையில் இருந்து சோசலிச நாடு என்ற பெயரையும் பெற்ற நாடாக மாற்றியதில் கமால் பாட்சாவின் உழைப்பு முழுமையாக இருந்தது இதனால் இவர் “துருக்கியின் தந்தை” என்று பொருள் படும் “அட்டாதுர்க்” என்ற பட்டத்தை பெற்றார்.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
