லக்னோ, நவ.10 அடுத்த அய்ந்து மாதங்களில், உத்தரப்பிரதேச சட்ட மன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, பா.ஜ., தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளுமா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளதென, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ‘சமாஜ்வாதி கட்சி யின் தலைவரும், முன்னாள் முதலமைச் சருமான அகிலேஷ் யாதவ் அண்மைக் காலமாக மக்களிடையே மீண்டும் பிர பலமாகி வருகிறார்; இவரால் பா.ஜ., விற்கு தேர்தலில் பெரும் பிரச்சினை வரும்’ என்ற பேச்சும் நிலவுகிறது.
இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர்கள் வாய் திறக்க மறுக்கின்றனர். உ.பி., தேர்தலுக்கு சென்ற இரு முறையும் வியூகம் வகுத்து பா.ஜ.,வை வெற்றி பெற வைத்தவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இவர், தேர்தலுக்கு கடைசி ஒரு வாரத்தில் அதிரடி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். பிரதமர் மோடியோ உ.பி.,யில், பா.ஜ., சார்பில் 22 பொதுக்கூட்டங்கள் நடத்தப் போகிறாராம்.
இதனால் அங்கு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் அக்கட்சி உள்ளது. இதற்கிடையே, பா.ஜ.,வின் கூட்டணிக் கட்சிகள் சென்ற தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பிடிவாதமாக உள்ளன. இன்னொரு பக்கம் ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் தனக்கும் கூட்டணியில் இடம் வேண்டும் என கேட்கிறார்.
இவருடைய கட்சி இருப்பது பீகாரில்தான். இருப்பினும் இந்த முறை உ.பி.,யில் இவர் போட்டியிட விரும்புகிறார். கூட்டணியில் இடம் கிடைக்காவிட்டால் 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடப் போகிறது. இது பா.ஜ.,விற்கு சாதகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
தொகுதிப் பங்கீட்டில் அகிலேஷ்க்கு காங்கிரசால் பிரச்சினை. ஆனால், ‘அக்கட்சியால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை.. காங்கிரஸ் எங் களுக்கு ஒரு சுமைதான்’ என்கிறாராம் அகிலேஷ். இப்படி அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக உ.பி., தேர்தல் களத்தில் பரபரப்பாக இருக்க காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியவில்லை.
