சென்னை, நவ. 10- இந்தியாவின் முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பெட்ரோலில் எத்தனால் கலப்பு குறித்த பரிசோதனை முடிவுகளை விளக்கி வெளி யிட்ட சமூக வலைதளப் பதிவு, இணையப் பயனர்களின் தீவிரக் கண்டனத்தைத் தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் களின்படி, வாகனங்களில் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்கும் ‘E20′ பெட்ரோல் பயன்பாடு நாடு முழுவதும் தீவிரமாக ஊக்குவிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், பெட்ரோலில் எத்தனால் சரியான அளவில் (20 சதவீதம்) கலக்கப்பட்டுள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளிலேயே எளிய முறையில் சோதித்துக்கொள்ளும் வழிகாட்டல் ஒன்றை பிபிசிஎல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒளிப்படங்களுடன் வெளியிட்டிருந்தது.
நிறுவனம் வெளியிட்ட சோதனைக் கருவியான டெஸ்ட் டியூப் ஒளிப்படங்களை வாகன ஓட்டிகளும், இணையப் பயனர்களும் மிக உன்னிப்பாகக் கவனித்தனர். அப்போது சோதனையின்படி பிரிந்து நின்ற அடுக்குகளின் அளவைக் கணக்கிட்டதில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது:
சோதனையில் காட்டப்பட்ட அளவீட்டின்படி, பெட்ரோலில் எத்தனால் கலவை 20 சதவீதம் என்பதற்குப் பதிலாக 33 சதவீதம் இருந்தது தெளிவாகத் தெரியவந்தது.
அரசுக்குச் சொந்தமான முன்னணி எண்ணெய் நிறுவனத் திற்கே எளிய தரக்கட்டுப்பாடு மற்றும் அறிவியல் அளவீடுகளைச் சரியாகக் கணக்கிடத் தெரியவில்லையா என இணையவாசிகள் கேள்வி எழுப்பினர்.
சமூக வலைதளங்களில் இந்தத் தவறு காட்டுத்தீப் போல பரவியதுடன், பொது மக்களின் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் ஆளானது.
பொதுமக்கள் மத்தியில் அரசு நிறுவனங்களின் வெளிப் படைத்தன்மை மற்றும் தரக் கட்டுப்பாடு குறித்த அதிருப்தி எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காமல் பிபிசிஎல் நிறுவனம் அந்த எக்ஸ் பதிவை உடனடியாக நீக்கியது. இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்த விவாதங்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
