ஆசிரியருக்குக் கடிதங்கள்

- Advertisement -

படத்திறப்பு நிகழ்வில் பாடங்கள் கற்போம்!

07-11-2026 அன்று மதியம் நடந்த காவேரிப் பட்டணம் பையூர் மதிமணியன் அவர்களின் வாழ்விணையர் சு.தமிழ்ச்செல்வி அவர்களின் படத்திறப்பின்போது கழகத்தின் பொதுச் செயலாளர்  வீ.அன்புராஜ் அவர்களின் நினைவேந்தல் உரையில் பேசும் போது கோவையில் பிரபலமான மருத்துவர் ஒருவர்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு அண்மையில் வெளியான ஆசிரியர் அய்யா அவர்களின் “வாழ்வியல் சிந்தனை” கட்டுரை தொகுப்பு இன்னும் எனக்கு வந்து சேரவில்லையே! என்று கேட்ட தகவலை சொல்லி ஆசிரியர் அய்யா அவர்களின்”வாழ்வியல் சிந்தனை” கட்டுரைகளை கழகத்தின் தோழர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார்.

அந்த செய்தியை கேட்ட போது “நீதிக்கும் நீதி” சொன்னவர் பெரியார்.

“மருத்துவருக்கும் மருத்துவம்” சொல்லுபவர் நமது ஆசிரியர் அய்யா அவர்கள் என்பதை அறிந்த போது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமை யாகவும் இருந்தது.

அப்படி நாம் மகிழ்ச்சி அடைந்தால் மட்டும் போதாது! நாம் அனைவரும் தந்தை பெரியாரின் கொள்கைப் புத்தகங்களை படிப்பதோடு ஆசிரியர் அய்யா அவர்களின் “வாழ்வியல் சிந்தனை” கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். அதுவும் உடல் சார்ந்த கட்டுரைகளை மாதத்திற்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும்.அதைப் பாடமாக கொள்ள வேண்டும்.

நமது உடல் நன்றாக உள்ளது என்று நாம் சொல்லிக் கொண்டு இருப்பதைவிட, மருத்துவர் களிடம் ஆண்டுக்கு ஒருமுறை , 60 வயதிற்கு மேலானவர்கள் ஆண்டுக்கு இருமுறை சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டு உங்கள் உடல் நன்றாக உள்ளது என்று மருத்துவர் நமக்குச் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

“சுவர் இருந்தால் தானே சித்திரம்” வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் நல்லபடியாக இருந்தால்தான் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஆசிரியர் அவர்கள் தலைமையில் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

2012இல்  இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு இன்று வரை அமையத்து (லாரி) ஓட்டு னராக பணி புரிகிறேன் .

இன்று வரை நான் உயிரோடு இருக்க காரணம் ஆசிரியர் அய்யா அவர்களின் “வாழ்வியல் சிந் தனை “கட்டுரைகளே! என்று நன்றி உணர்வோடு சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

ஆசிரியர் அவர்களின் வாழ்வியலை படிப்போம்!  உடல் நலத்தை காப்போம்!

   – ஓமலூர் பெ.சவுந்திராசன்

பொதுக்குழு உறுப்பினர்,  திராவிடர் கழகம்

 

 

பிற்படுத்தப்பட்டவர்கள் படும் பெரும்பாடுகள்! 

1947இல் விடுதலை கிடைத்தது. 1953ஆம் ஆண்டில்தான் காகா கலேல்கர் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்தது. அந்த ஆணையத்தை விளங்காமல் ஆக்கினர்.

எண்ணெய் செலவுதான்!

ஆண்டுகள் உருண்டன!

1979ஆம் ஆண்டு பி.பி. மண்டல் தலைமை யில் 2ஆம் ஆணையம் பிற்படுத்தப்பட்டோ ருக்கு அமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்தவர்கள் 10 நீண்ட ஆண்டுகளை உருட்டினார்கள்.

ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறிலும் (1990) அமல்படுத்த ஏகப் பட்ட எதிர்ப்புகள்  –
27 சதவீதத்தை என்றனர். முழுவதாக அமல்படுத்த முடியாது.

பல்வேறு காரணத்தைக் காட்டி ஆண்டுக்கு 9 சதவீதம் என மூன்றாண்டு களுக்கு இந்த 27அய் 9,9,9 ஆக ஆக்கினார்கள். அதிலும் குளறுபடிகள்.

ஆனால், இந்த 10 சதவீதம் EWS இருக்கிறது பாருங்கள். இது மட்டும் ஒரே வாரத்தில் எல்லாச் சடங்குகளையும் முடித்து உடனுக்கு உடன் அமல்படுத்தி விட்டார்கள். பிற் படுத்தப்பட் டோருக்குத்தான் விதிகள்  எல்லாம்? பிற்படுத்தப் பட்டோர் கெதி அதோ கெதிதானா!?

– இ. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *