குரியன் ஜோசப் குழு கலைப்பு: த.வெ.க. அரசுக்குத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 8 – ‘‘த.வெ.க. ஆட்சியில் மாநில உரிமைகளுக்குத் தடை, சினிமா தியேட்டர்க ளுக்கு அனுமதி’’ என்று நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழு கலைக்கப்பட்டது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய, மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் குழுவை திடீரென கலைத்து த.வெ.க. அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இந்தியக் கூட்டாட்சிக் கட்டமைப்பைப் வலுப்படுத்தவும் இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, மாநிலத் திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மாநிலங்களின் உரிமைகளைப் பாது காக்கவும், இந்தியக் கூட்டாட்சிக் கட்டமைப்பை மறுசீரமைக்கவும் 2025 இல் அமைக்கப்பட்ட இக்குழு, முதல் அறிக்கையை 2026 பிப்ரவரி யில் அளித்தது.

இந்நிலையில், குரியன் ஜோசப் குழுவை திடீரென கலைத்து த.வெ.க. அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள், ஒன்றிய, மாநில உறவுகள், நடைமுறையில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்தல் மற்றும் மாநிலத்தின் சட்ட மற்றும் நிர்வாக அமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் இப்போது தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘திரைப்படங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, மாநில உரிமைகளுக்கு அளிக்க த.வெ.க. அரசு மறுப்பதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. ஆட்சியில் சினிமா தியேட்டர்க ளுக்குப் பச்சைக் கொடி, மாநில உரிமைகளுக்குத் தடையா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *