“அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்து ஏற்புடையது அல்ல” சி.பி.அய். முத்தரசன் பேச்சு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கும்பகோணம், ஆக.9- “காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்து ஏற்புடையதல்ல” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று (8.8.2026) நடத்திய நடைபயண பிரச்சார இயக்கத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பெண்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுகிறது.

நாடாளுமன்றத்துக்கு தற்போது உள்ள 543 தொகுதி களில் 33 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இதற்கு மாறாக நாடாளுமன்ற தொகுதிகளை 850 ஆக உயர்த் துவது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன. நிதி நெருக்கடி இருப்பது உண்மைதான். ஆனால், அதைக் காரணம் காட்டி, மக்களுக்குப் பயன்படக் கூடிய திட்டங்களை அறிவிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. தேர்தலின் போது அளித்த விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு ரூ.2,500 உதவித் தொகை, வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.4,000 உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து நிதி நிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்து ஏற்புடையதல்ல” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *