இளம்பெண் உடலைத் தோண்டி தலை துண்டித்து மாந்திரீக பூஜையாம்!

1 Min Read
- Advertisement -

நரசிம்மகுடா, நவ.8 தெலுங் கானா மாநிலம், நவரங்பூர் மாவட்டம், நரசிம்ம குடாவை சேர்ந்தவர் நிலாத்ரீ மாஜி (வயது 27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நோயால் பாதிக்–கப்பட்டு இருந்த நிலாத்ரீ மாஜி கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி இறந்–தார். உறவினர்கள் அவரது உடலை சுடுகாட்டில் புதைத்தனர்.
திருமணமாகாத இளம்பெண் இறந்ததால் அவரது உடலை மாந்திரீகம் செய்பவர்கள் தோண்டி எடுத்துச் சென்று விடுவார்கள் என எண்ணி 21 நாள்கள் இரவு தினமும் காவல் காத்து வந்தனர். அதன் பிறகு காவலை கை விட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (6.11.2026) நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் நிராத்ரீ ராஜுவின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அவரது தலையை துண்டித்துக் கொண்டு உடலை வீசி விட்டுத் தப்பிச் சென்றனர்.
அவ்வழியாகச் சென்ற வர்கள் தலை இல்லாமல் உடல் மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந் தனர். இது குறித்து அவரது உறவினர்கள், பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் நரசிம்ம குடா காவல்துறையினர் புகார் செய்தனர். காவல்துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இது சம்பந்தமாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *