மூடநம்பிக்கையின் உச்சம்!

- Advertisement -

கொல்கத்தா, நவ. 7– மேற்கு வங்கத்தில் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன், கணவன் காளி கோயி லில் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் நகரின் நாராயண்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு கோஷ். இவரது மனைவி சீமா சர்க்கார் (வயது 36).

இவர் 5.11.2026 அன்று அங்குள்ள காளி கோயில் ஒன்றில் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை மடியில் வைத்தவாறு, அருகில் கத்தியுடன் இருந்துள்ளார். அவரது இரண்டு மகன்களும் அரு கிலேயே அமர்ந்திருந்தனர்.

அவரை அந்தக் கோலத்தில் கண்ட கோயிலுக்கு வந்த உள்ளுர் வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

கங்காராம்பூர் காவல் நிலையப் பொறுப்பாளர் பூர்ணேந்து குண்டு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரிண்டு கோஷைக் கைது செய்தனர். மனைவி சீமா அய்தரின் தலையை மீட்டனர்.

ரிண்டு கோஷ் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் அங்கு சீமாவின் தலையற்ற உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

ரிண்டு கோஷ் உடைய உறவினர் ராஜேஷ் பிரமாணிக்கின் கூற்றுப்படி, பேருந்து நடத்துநர் வேலையை இழந்த பிறகு, கோஷ் பொருளாதார நெருக்கடியை சந்தித்தார். அவர் சிறு தொழில்களை செய்ய முயன்றும் நிலையான வருமானம் ஈட்ட முடியவில்லை.

சமீப காலங்களில் கோஷின் வாழ்க்கை முறை கணிசமாக மாறியது. அவர் இறைச்சி உண்பதை முற்றிலுமாகத் துறந்து, முழுமையான சைவ உணவு உண்பவராக மாறி னார். தாந்திரீகத்தில் நாட்டம் உடையவராக அவரின் செயல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தன் வேலை பறிபோனதில் இருந்து தான் சைக்கோவாக மாறி விட்டதாக ரிண்டு கோஷ் காவல்துறை யினரிடம் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *