சென்னை, நவ.6- தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்கு, இணைய தளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம் எனத் தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது:-
பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைச் சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி கொண்டு, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தொண்டர்களுக்குத் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்துவருகிறது.
அவ்வகையில் 2027ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2026-ஆம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதி தாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது, இலக்கிய மாமணி விருது (மூன்று அறிஞர்களுக்கு) ஆகிய விருதுகளுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்களின் ஆணைக் கிணங்க 2026-ஆம் ஆண்டில் புதியதாக அறிவிக்கப்பட்ட கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரிலான விரு துக்கும் தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன.
திருவள்ளுவர் திருநாளினை முன்னிட்டு தெரிவு செய்யப்பெறும் மேற்குறித்த அனைத்து விருதாளர்களுக்கும் ரூ.5 லட்சம் விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பெறும்.
தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதள இணைப்பின் (www.tamilvalarchithurai.tn.gov.in/tdawards) வாயிலாக மட்டும் 15.12.2026ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்கத் தெரிவிக் கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
‘திருவள்ளுவர் விருது’ உள்ளிட்ட தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Leave a Comment
