மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் பொருத்தப்பாட்டை இழந்து விட்டன: உச்ச நீதிமன்றம்

- Advertisement -

புதுடில்லி, நவ.6- கருவுறு தல் விகிதம் குறைந்து வரும் தற்போதைய சூழலில், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தை களைப் பெற்றெடுப்பவர்களுக்குத் தண்டனை வழங்கும் சட்டங்கள் அதன் பொருத்தப்பாட்டை இழந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தல்களில் போட்டியிடுவ தற்கான தகுதிகளில், இரு குழந்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற சட்டங்களின் செல்லுபடித்தன்மை குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு, தனது தீர்ப்பை 4.11.2026 அன்று வழங்கியது.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‘இந்தியாவில் கருவுறுதல் விகிதம் 3-இல் இருந்து 1.9 ஆக குறைந்துள்ளது. ஒரு தலை முறைக்கான முழுமையான மாற்று விகிதம் 2.1 ஆகும். இந்தியாவில் மக்கள்தொகை இன்னும் குறையத் தொடங்கவில்லை என்றாலும், கருவுறுதல் விகிதம் இந்த மாற்று விகிதத்துக்கு கீழே சரிந்திருப்பது, எதிர்காலத்தில் மக்கள் தொகை முதியவர்களை அதிகம் கொண்ட தாக மாறுவதற்கும், உழைக்கும் மக்கள் தொகையின் பங்கு குறைவதற்கும் வழிவகுக்கும்.

எனவே, மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் தங்கள் பொருத்தப் பாட்டை இழந்துவிட்டன. இத்தகைய மக்கள்தொகை மாற்றங்களை கவனத்தில் கொள்ளத் தவறினால், இந்தியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இரு குழந்தைகள் கொள்கையைப் பின்பற்றத் தவறினால் தண்டனைக்கு உள் ளாகும் சட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண் டுமா என்ற சட்டக் கேள்வியை, இந்த அமர்வு கூடுதல் நீதிபதி களைக் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுகிறது.

இத்தகைய சட்டங்கள் நீடிக்க அனுமதிக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அரசியல் பிரதிநிதித்துவத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. பொதுப் பதவியை வகிக்கும் திறனுக்கும் அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தை களின் எண்ணிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், இது குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பதற்கும் இடையே ஒரு நியாயமற்ற தேர்வை மேற்கொள்ள மக்களை கட்டாயப் படுத்துகிறது. இது அரசிய லமைப்புச் சட்டத்தின் 21ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள இனப்பெருக்க சுயாட்சி உரிமையை பறிப்பதாக அமைகிறது.’ என்று தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *