நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தனித் தொகுதிகளைச் சுழற்சி முறையில் மாற்றக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

- Advertisement -

புதுடில்லி, நவ.6- நாடாளு மன்றம் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல் களில் பட்டியல் இனத்தவர் (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.டி.) ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 191-காதிப்பூர் சட்டமன்ற தொகுதியின் வாக்காளரான ஜெகதீஷ் சிங் என்பவர் உச்சநீதி மன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “காதிப்பூர் தொகுதி கடந்த 70 ஆண்டுகளாக தனித்தொகுதி யாகவே நீடிக்கிறது. இதனால் பொதுப் பிரிவினர் அங்கு போட்டியிட முடிவதில்லை. இது அரசியல் சாசனத்தின் 14, 15 மற்றும் 19 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. மேலும், இந்த முறை ஒட்டு மொத்த சமூகத்திற்கு பயன் படாமல், ஒருசில குறிப்பிட்ட அரசியல் குடும்பங்களுக்கு மட் டுமே பயனளிக்கிறது” என்று கூறியிருந்தார்.

மேலும், ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சுழற்சி முறை இடஒதுக்கீடு வழங்குவது போல, நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளையும் சுழற்சி முறையில் மாற்றியமைக்க 2002-ஆம் ஆண்டின் தொகுதி மறு வரையறை சட்டத்தின் பிரிவு 9(1)(சி)-க்கு எதிராக உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 4.11.2026 அன்று விசார ணைக்கு வந்தது.

அப்போது, இந்த சட்டப் பிரிவை உறுதிசெய்த அலகா பாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பில் தலைமை நீதிபதிகள் மறுத்து விட்டனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

எஸ்.சி., எஸ்.டி. மக்கள் அதிக மிருக்கும் பகுதிகளைத் தனித் தொகுதிகளாக அறிவிக்க சட்டம் வழிவகை செய்கிறது. தனித் தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றுவது சிறப்பாக இருக்கும் என்றாலும், அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. அது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கூறுகையில், “பலவேறு அரசியல் கட்சிகள் உள்ள ஒரு ஜனநாயக நாட்டில், வாக்காளர்கள் வேட் பாளர்களின் ஜாதி, மதத்தைப் பார்க்காமல் கட்சியின் கொள் கைகளை நோக்கி வாக்களிக்க வேண்டும். கொள்கைதான் முக்கியமே தவிர அதை யார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. எனவே உங்கள் வாதம் ஏற்கத்தக்கது அல்ல” என்று குறிப்பிட்டார்.

மேலும், பொதுப் பிரிவின ரின் தனித்தொகுதியில் போட்டி யிடாவிட்டாலும், இதர பொதுத் தொகுதிகளில் போட்டியிட அவர்களுக்கு உரிமை உள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறிப்பிடுகையில், “உங்களுக்கு இந்தச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமென்றால் நீங்கள் நாடாளு மன்றத்தையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ தான் அணுக வேண்டும். அதற்காக நீங்கள் பொது மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்திக் கூட கொள்ளலாம்” என்று கூறினார்.

தனித்தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றக் கோரும் மனு தாரரின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டாலும், அவர் தனது கோரிக்கை குறித்து மக்கள் பிரதிநிதிகளை அணுகிப் பேச முழு சுதந்திரம் உள்ளது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *