புதுடில்லி, அக்.16 இந்திய தலைமைத் தேர்தல் ஆணை யர் மற்றும் பிற தேர்தல் ஆணை யர்கள் தங்களின் அதிகாரப் பூர்வ பணிகளைச் செய்யும் போது, அவர்களின் சில நடவடிக் கைகளுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்கும் 2023-ஆம் ஆண்டின் சட்டப் பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிச்சேவை நிபந் தனைகள், பதவிக்காலம்) சட்டம் 2023-இன் 16-ஆவது பிரிவு, பதவியில் இருக்கும் அல்லது முன்பு பதவி வகித்த தேர்தல் ஆணையர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
அதாவது, ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையராகவோ அல்லது தேர்தல் ஆணையராகவோ இருக்கும்போது அல்லது முன்பு இருந்தபோது, தனது அதிகாரப் பூர்வ பணிகளின் போது மேற் கொண்ட நடவடிக்கை அல்லது கூறிய கருத்துகளுக்காக:
அவர் மீது தொடுக்கப்படும் உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்கக்கூடாது. ஏற்ெகனவே தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணையையும் தொடரக்கூடாது.
தற்போது நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும், இந்தச் சட்டப்பிரிவே முதன் மையானதாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 16-ஆவது சட்டப்பிரிவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், ஜனநாயகத்தின் வெளிப் படைத்தன்மையைப் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் கூறி, அதனைச் செல்லாது எனத் தீர்ப்பளிக்கக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜெயமால்ய பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு 13.10.2026 அன்று விசா ரணைக்கு ஏற்றுக்கொண்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கும், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் தாக்கீது (நோட்டீஸ்) அனுப்ப உத்தரவிட்டது. மேலும், இதே விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றொரு மனுவுடன், இந்த ஏடிஆர் அமைப்பின் மனுவையும் இணைத்து விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தன
