ராமன் கோயில் நன்கொடை முறைகேடு குறித்து சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பாம்!

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 5- ராமன் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில், சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பிரமாண்ட முறையில் அயோத்தி ராமன் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயிலில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு நன்கொடையாகவும், காணிக்கையாகவும் நாள்தோறும் லட்சக்கணக்கான ரூபாய், தங்கம், வெள்ளி நகைகளை பக்தர்கள் வழங்குகின்றனர். இந்த நன்கொடை, காணிக்கை மற்றும் வரவு, செலவை ராமன் கோயில் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.

இந்த பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு 3.11.2026 அன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அயோத்தி நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நன்கொடை எண்ணும் பணியின்போது நன்கொடை திருடப்பட்டதை கண்டுபிடித்துள்ளது என்று கூறினார்.

அதைப் பதிவு செய்த நீதிபதிகள், அயோத்தி நீதிமன்ற, விசாரணையை பார்த்துக் கொள்ளும். மனுதாரர்கள் அந்த நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும். வழக்கின் தகுதி குறித்து நாங்கள் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறி மனுக்களை முடித்து வைத்தனர்.

இதேபோன்று நன்கொடை முறைகேடு தொடர்பாக சி.பி.அய். விசாரணை கோரி, உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கலானது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது என குறிப்பிட்ட நீதிபதிகள், இதனை கவனத்தில் கொண்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *