வாக்காளர் பட்டியலில் ஆதார் மட்டும் போதாது ‘குடியுரிமை சான்றுகளை’ பெற டில்லி வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

- Advertisement -

புதுடில்லி, நவ. 4- டில்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் போது, “மேப்பிங் செய்யப்படாத” பிரிவின் கீழ் அறிவிக்கை அனுப்பப்பட்டு, அதற்கு ஆதாரமாக ஆதார் கார்டை மட்டும் சமர்ப்பித்த வாக்காளர்கள் தற்போது கூடுதல் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

வாக்காளர்களின் குடியுரி மையை உறுதிப்படுத்துவதற்காக கூடுதல் ஆவணங்களைச் சேகரிக்குமாறு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு  அறி வுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் தகுதியான வர்கள் என்றும், அவர்கள் பல ஆண்டுகளாக அந்த முகவரி யிலேயே வசித்து வருகிறார்கள் என்றும் கள ஆய்வறிக்கை மற்றும் உறுதிமொழிகளை சமர்ப்பித்த போதிலும், வாக்காளர்களை மீண்டும் நேரில் சந்தித்து அவர்கள் ‘பங்களாதேஷி’ அல்லது ‘ரோஹிங்கியா’ அல்ல என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்களைக் கோருமாறு வாக்காளர் பதிவு அதிகாரிகள் (ERO) தங்களைப் பணிப்பதாக பல BLO-க்கள் தெரிவித்துள்ளனர்.

 வாக்காளர்கள் தவிப்பு:

வடகிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பூத் லெவல் அலுவலர் (BLO) கூறுகையில், “இந்த வாக்காளர்களை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அவர்களிடம் வங்கிக் கணக்கு உட்பட வேறு எந்த ஆவணமும் இல்லை என்று கூறுகிறார்கள். நாங்கள் எத்தனை முறை அவர்களிடம் சென்று கேட்பது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பி.எல்.ஓ. கூறுகை யில், ஆவணங்களைச் சேகரிப்பது குறித்த வழிகாட்டுதல்கள் அடிக்கடி மாற்றப்படுவதால் பெரும் குழப்பம் நிலவுவதாகக் குறிப்பிட்டார். ஆதார் அட் டையை மட்டும் வைத்து ஒரு வாக்காளர் ரோஹிங்கியாவோ அல்லது பங்களாதேஷியோ இல்லை என்பதை எப்படி உறுதிப்படுத்த முடியும் என அதிகாரிகள் கேட்பதாகவும், குடியுரிமைக்கான கூடு தல் சான்றுகளைத் திரட்டுமாறு தங்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் அவர் தெரி வித்துள்ளார். கடவுச்சீட்டு (Passport) சமர்ப்பித்த ஒரு வாக்காளரிடம் கூட மீண்டும் சரிபார்ப்பிற்காக கூடுதல் ஆவணங்கள் கேட்கப்பட்டதாக மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.

இருப்பினும், அத்தகைய உத்தரவுகள் எதுவும் பிறப்பிக் கப்படவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும் வாக்காளர் பட்டி யலில் சட்டவிரோத குடி யேறிகள் குறித்த எவ்வித அடையாளக் குறிப்புகளும் செய்யப்படவில்லை என்றும் விளக்கியுள்ளனர்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட
11 ஆவணங்கள்

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் தகுதியை நிறுவ பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள், கடவுச்சீட்டு உட்பட 11 வகை ஆவணங்களை நிர்ணயித்துள்ளது. சமர்ப்பிக் கப்பட்ட ஆவணங்களில் திருப்தியடையாத வாக்காளர் பதிவு அதிகாரி (ERO), அதற்கான காரணங்களைத் தெளிவாகப் பதிவு செய்து, ‘காரணங்களை விளக்கும் உத்தரவு’ மூலம் அந்த வாக்காளரைத் தகுதியற்றவர் என அறிவிக்கலாம்.

ஆரம்பகட்ட தகவல்களின் படி சுமார் 350 வாக்காளர்கள் ‘தகுதியற்றவர்கள்’ எனக் குறிக்கப் பட்டிருந்த நிலையில், ஆதாரமற்ற அல்லது பலவீனமான காரணங் களுக்காகப் பெயர்களை நீக்கக் கூடாது என்றும், தீவிரமான களச் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் டில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி  அலுவலகம் எச்சரித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *