“விடுதலை” நாளேட்டிற்கு புதிய அச்சு இயந்திரம் இயக்கு விழா இன்று (4-11-1969)
சென்னை பெரியார் திடலில் உள்ள உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான “விடுதலை” நாளேட்டிற்கு கிழக்கு ஜெர்மனியிலிருந்து லட்ச ரூபாய் மதிப்பில் வரவழைக்கப்பட்ட “விக்டோரியா 820” எனும் புதிய அச்சு இயந்திரம் இயக்கு (தொடக்க) விழா நடைபெற்ற நாள் இன்று (4-11-1969).
தந்தை பெரியார் அவர்களுக்கு
வெள்ளிச் சிம்மாசனம் வழங்கிய நாள் இன்று (4-11-1971)

சேலத்தில் தந்தை பெரி யாருக்கு “வெள்ளிச் சிம்மாசனம்” வழங்கும் விழா நடைபெற்ற நாள் இன்று
(4-11-1971)
இந்த வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த இந்த விழாவின் போது, தள்ளாத வயதிலும் தந்தை பெரியார் அவர்கள், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைத் தன் கையசைத்து அழைத்து, அந்த வெள்ளி சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்தார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், தான் விரும்பியபடி சமூக நீதியையும், திராவிடக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் நிலைநாட்டி ஆட்சி புரிந்த கலைஞரைப் பாராட்டும் விதமாக இந்த நெகிழ்ச்சியான செயலைச் செய்தார். இந்த நிகழ்வு திராவிட இயக்க வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
