இந்நாள் – அந்நாள்

டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி) நினைவு நாள் இன்று (22.7.1968)

தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பெண் விடுதலைக்காக குர லெழுப்பியவர்களில் டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி) முக்கியமானவர்.

தன்னுடைய அனுபவங்களை “My Experience as a Legislator” என்ற ஆங்கில புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் முத்துலட்சுமி.

சென்னை மாகாண சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப் பட்ட முத்துலட்சுமி, டிசம்பர் 1926 முதல் ஜூன் 1930 வரை இந்தப் பணியில் ஈடுபட்டார். பின்னர் சட்டமன்றத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்ந்தெடுக் கப்படுவதற்கு அவரது பெயரை முன் மொழிந்தவர் இன்றைய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவும், நீதிக்கட்சியைச் சேர்ந்தவருமான பி. டி. ராஜன்.

டாக்டர் முத்துலட்சுமி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, நீதிக்கட்சியைச் சேர்ந்த எம். கிருஷ்ணன் உரையாற்றுகையில் கூறியதாவது :

சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கை விவாதங்களின் போதும், பொதுவான விவாதங் களின் போதும் பல்வேறு சமூகப் பிரச்சினை களுக்குக் குரல் கொடுத்தவர் முத்துலட்சுமி.

உயர்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர் களுக்கு, அதுவும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பரிசோதனை நடை முறையில் இருந்தது. இப்பரிசோதனை தொடக்க நிலைப் பள்ளிகளுக்கும், மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் முத்துலட்சுமி. பெண்களில் மிகக் குறைவான சதவீதத்தினருக்கே உயர்கல்வி கிடைத்துவந்த நிலையைச் சுட்டிக்காட்டி, பெண் களுக்கான உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றார்.

பால்வினை நோயால் பாதிக்கப் படும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க, பெண் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய முக்கியமான கோரிக்கை உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்குப் பிரதி நிதித்துவம் வேண்டும், பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது போன்ற அவரது முன்னெடுப்புகள் மிகவும் முன்னோடியானவை.

டாக்டர் முத்துலட்சுமியின் முக்கியமான பங்களிப்பாக இன்றளவும் கருதப்படுவது, தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சட்டமன்றத் தில் அவர் கொண்டுவந்த சட்ட முன்வரைவே. ‘கோயில்களுக்குப் பெண்களைப் பொட்டுக்கட்டி நேர்ந்துவிடும் சமூகக் கொடுமையை’ (தேவதாசி முறை) எதிர்த்துச் சட்டமன்றத்தில் விரிவான கொள்கைப் போரைத் தொடுத்தவர்  முத்துலட்சுமி.

இச்சட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்து, 30.10.1927 நாளிட்ட “குடிஅரசு” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதினார். மேலும், சட்ட வரைவுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்து, அரசுக்குக் கடிதமும் எழுதினார்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர். முத்துலட்சுமி.  தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும், மருத்துவரும் ஆவார். பெண்களுக்கான வாக்குரிமை, மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவுதல் போன்ற மாபெரும் சமூக மாற்றங் களுக்கு வித்திட்டவர்.

புதுக்கோட்டையில் நாராயணசாமி அய்யர் மற்றும் சந்திரம்மாள் இணையருக்கு 1886 ஜூலை 30 இல் பிறந்தார். கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தனது விடாமுயற்சியால் பள்ளிப் படிப்பை முடித்த அவர், 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவ ரானார். இவர் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவர் ஆவார். சமூக சீர்திருத்தங்கள் முத்துலட்சுமியின் பொதுச் சேவை பல பரிமாணங்களைக் கொண்டது.

1926 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்,  உலகின் முதல் பெண் சட்டமன்ற துணைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஆதரவற்ற பெண்களுக்காக 1930 ஆம் ஆண்டு சென்னையில் “அவ்வை இல்லத்தை” (Avvai Home) நிறுவினார். தனது சகோதரியை புற்றுநோயால் இழந்த வேதனையில், 1952 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் புற்றுநோய் மருத்துவமனையை (Adyar Cancer Institute) நிறுவினார்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு இவருக்கு 1956 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி சிறப்பித்தது. தமிழ்நாடு அரசு இவரது நினைவாக, ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் ‘டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது.

மேலும், இவரது பிறந்த நாளான சூலை 30 ஆம் தேதி தமிழக அரசு மருத்துவமனை களில் “மருத்துவமனை நாளாக”  கொண்டாடப் படுகிறது.

முத்துலட்சுமி  1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

 

‘உலக மூளை நாள்’ இன்று (ஜூலை 22, 2026)

இந்நாள் - அந்நாள்

மனித உடலின் மிக முக்கியமான, வியப்பான மற்றும் சிக்கலான உறுப்பு மூளை.  நமது எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள் மற்றும் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தும் ‘தலைமையகம்’ இதுவே.

மூளை ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 ஆம் நாள் “உலக மூளை நாள்”  உலகளவில் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக நரம்பியல் கூட்டமைப்பால் (World Federation of Neurology – WFN) 2014 ஆம் ஆண்டு இந்த நாள் முதன்முறையாகத் தொடங்கப்பட்டது.

மூளை தொடர்பான நோய்கள் மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவது.

பக்கவாதம் (Stroke), மறதி நோய் (Dementia), ஒற்றைத் தலைவலி (Migraine), வலிப்பு நோய் (Epilepsy) போன்ற பாதிப்புகளைத் தடுக்கும் வழிகளைக் கற்பிப்பது.

உலகின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் மூளை நரம்பியல் சிகிச்சை சீராகவும் எளிதாகவும் கிடைக்க வழிவகை செய்வது.

ஆரோக்கியமான மூளைக்கு சில எளிய வாழ்வியல் வழிகள்.

நமது மூளையை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில அன்றாட வாழ்வியல் மாற்றங்கள் போதுமானவை.

காய்கறிகள், பழங்கள், நட்ஸ் (பாதாம், வால்நட்) மற்றும் தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

புத்தகங்கள் வாசித்தல், புதிர்கள் விடுவித்தல் (Sudoku, Puzzles), புதிய மொழிகள் அல்லது திறன்களைக் கற்றுக்கொள்வது மூளைச் செல்களை சுறுசுறுப்பாக வைக்கும்.

நாள்தோறும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்.

நாள்தோறும் இரவு 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் மூளையின் நினைவாற்றலை மேம்படுத்தவும், நச்சுக் கழிவுகளை வெளியேற்றவும் மிகவும் அவசியம்.

நமக்கு பிடித்த பாடலைக் கேட்பது மன அழுத்தத்தைக் குறைத்து மூளைக்கு அமைதியைத் தரும்.

சிக்கலான கணக்கீடுகளை புரிந்து கொள்வது மட்டும்தான் மூளையின் வேலை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

நல்லறிவு அன்பைப் பொழியும்; தெளிவைக் கொடுக்கும்; அனைவரையும் மதிக்கும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *