இந்தூர், நவ.4 மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் நடைபெற்ற ராம கதையின் போது, பாகேஷ்வர் என்ற மடத்தின் தலைவர் 26 வயதான தீரேந்திர சாஸ்திரி, ராமனையும் கிருஷ்ணனையும் ஒப்பிட்டு கிருஷ்ணனை மிகவும் மோசமாக சித்தரித்தார்.
தீரேந்திர சாஸ்திரி சொற்பொழிவின் போது கூறியதாவது:
“எங்கள் ராமபிரான் நிற்கும் தோர ணை நேராக இருக்கும். அவரது பெயர், நடை, தோற்றம், வாழும் இடமான அயோத்தி வரை அனைத்துமே நேர்கோடானது. வில் ஏந்துவது எளிதான விளையாட்டு அல்ல” என்று குறிப்பிட்டார்.
“உங்களது கிருஷ்ணன் ஒளிப்படங் களிலேயே வளைந்து நெளிந்து இருப்பார். நிற்கும் போது கூட கால் மேல் கால் போட்டு, இடுப்பை வளைத்து, கழுத்தைச் சாய்த்து மூன்று இடங்களில் வளைந்து நின்றுதான் புல்லாங்குழல் வாசிப்பான். அவரது பெயர், நடை, மற்றும் ஊரான பிருந்தாவனம் கூட வளைவானது. புல்லாங்குழல் வாசிப்பது எல்லாம் பெரிய சாதனையா? எங்கள் குழுவில் உள்ளவர் கூட அழகாக ஊதுவார்’’ என்றார்
இந்த காட்சிப் பதிவு சமூக வலை தளங்களில் பரவியதை அடுத்து, மதுரா மற்றும் பிருந்தாவனத்தைச் சேர்ந்த கிருஷ்ண பக்தர்களும், பல இந்து மதத் தலைவர்களும் கடுமையான எதிர்ப்பைப் பதிவிட்டனர். பகவான் கிருஷ்ணனை இழிவுபடுத்தும் வகையி லும், ராம-கிருஷ்ண பக்தர்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் இந்த பேச்சு அமைந்திருப்பதாகக் கூறி அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சர்ச்சை வலுத்ததை தொடர்ந்து தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டு மன்னிப்புக் கோரினார்.
பக்தியின் வெளிப்பாடாம்
“நாங்கள் கிருஷ்ணனுக்கு எதி ரானவர்கள் அல்ல. மிக நெருங்கிய அன்புக்குரியவர்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு செல்லமாகப் பேசுவது போன்ற ஒரு பாவனையில் தான் நான் அவ்வாறு பேசினேன். கிருஷ்ண பக்தியில் அவரைத் திட்டுவது கூட ஒருவகை பக்திதான் மிகவும் ஆழமான அன்பு உள்ள போது ஒருவரை மோசமாகத் திட்டுவது வழக்கம் தானே!
“ராமனும் கிருஷ்ணனும் வெவ்வேறு அல்ல, இருவருமே ஒன்றுதான். பக்தர்களைப் பிரிப்பது என் நோக்கமல்ல. எனது பேச்சு யாராவது ஒருவரின் மனதைப் புண்படுத்தியிருந்தால் நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என கைகூப்பி மன்னிப்புக் கோரினார்.
இவரை மோடி ‘தனது உடன் பிறவா தம்பி’ என்று டில்லியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் இவரை அழைத்துப் பேசினார்.
இந்த சாமியார் மீது பல நில மோசடிப்புகார்களும், இவரது சகோதரன் மீது மிரட்டல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. இவரது சகோதரனின் வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு வந்த போது எனக்கும் எனது சகோதரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் மடத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வகிப்பவர் இவர் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்.
