திருச்சி பெரியார் கல்வி நிறுவன அலுவலகப் பணித் தோழர் நடராஜன் நினைவேந்தல்

2 Min Read
- Advertisement -

திருச்சி, நவ. 3– திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீண்டகாலம் அலுவலகப் பணியாளராகப் பணியாற்றி மறைந்த நடராஜனின் நினைவேந்தல் கூட்டம் பள்ளி வளாகத்தில் உள்ள நாகம்மையார் கலையரங்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருமான வீ. அன்புராஜ், மறைந்த  நடராஜ் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் ஆற்றிய உரையில், கடந்த 20.04.2010 முதல் பள்ளியின் System Administrator-ஆக இணைந்து கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக  நடராஜன் ஆற்றிய அர்ப்பணிப்புள்ள பணி மற்றும் கடின உழைப்பை நினைவுகூர்ந்து பேசினார். மேலும், ” நடராஜனின் குடும்பத்தாருக்கு இந்தப் பள்ளி நிர்வாகம் என்றென்றும் உறுதுணை யாக நிற்கும்; அவரது மனைவி அபிராமி வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், ஏதாவது ஒரு பணியில் சேர்ந்து தனது வாழ்வை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் இருவரும் தங்கள் கல்வியில் சிறந்து விளங்கித் தங்கள் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும்” என்றும் தாளாளர் தன் உரையில் அன்போடு அறிவுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், “நம்முடன் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், அலுவலகப் பணித் தோழர்களும் தங்களது உடல் நலனை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்றும் அனைவரையும் வலி யுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, எதிர்வரும் கல்வி யாண்டு முதல் சிறப்பாகப் பணி புரியும் அலுவலகப் பணித் தோழர் களுக்கு நடராஜனின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் எனத் தெரிவித்தததோடு, அந்த விருதும், நடராஜனின் மனைவி அபிராமி அவர்கள் கரங்களால் வழங்கப்படும் என்பதையும் நெகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா மற்றும் ஆசிரியர்கள் ஆர். பிரான்ஸிட்டா, டி. இசபெல்லா, எஸ். செல்வி ஆகியோர்  நடராஜ் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பணி அனுபவங்களையும், எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலிலும் அவர் வெளிப்படுத்திய உதவும் குணத் தையும், மனிதநேயத்தையும் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டு அவரது குடும்பத்தாருக்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் மறைந்த  நடராஜ் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் ரூ. 3,00,000/- (மூன்று இலட்சம் ரூபாய்) குடும்ப நல நிதியை தாளாளர்  வீ. அன்புராஜ் அவர்கள்,  நடராஜ் அவர்களின் மனைவி அபிராமி மற்றும் மகள்கள் கிருத்திகா, சுதர்சனா ஆகியோரிடம் நேரில் வழங்கினார்.

நிகழ்வில், நடராஜனின் உறவி னர்கள், பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலகப் பணியா ளர்களும் நினைவேந்தலில் கலந்து கொண்டு படததிற்கு மலர் தூவி செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *