தேசிய விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை ‘ஸ்டார்ட் அப் டி.என்.’ விருதினை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலை.) பெற்றது

- Advertisement -

பெரியார் கல்வி நிறுவனங்கள்

தஞ்சாவூர், அக்.28 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு 15.10.2026 அன்று சென்னை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் தஞ்சாவூரில் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் ஆஸ்டோநாட்டிக்ஸ் அன்ட் எவீயேசன் (IAAA) மற்றும் தமிழ்நாடு அரசின் ‘ஸ்டார்ட் அப் டி.என்.’ நிறுவனமும் இணைந்து தேசிய விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை ஸ்டார்ட் அப் பிட்ச் பெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத் துறைக்கான பொருத்தம், சிறந்த தீர்வுகான கண்டுபிடிப்பு, முதலீட்டுக்கான வடிவமைப்பு தொழில்நுட்பப் புதுமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கொண்டு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவாக 25 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு 27.10.2026 அன்று கோயம்புத்தூரில் உள்ள நேரு கார்டன்ஸ்ட், நேதாஜி அரங்கில் தேசிய விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை ‘ஸ்டார்ட் அப்’ உச்சி மாநாட்டில் விருதுகள் வழங்கப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களில் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக (நிகர்நிலை) விண்வெளி பொறியியல் துறையின் இறுதியாண்டு மாணவர் மற்றும் Hydrogliss Technologies  நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, நிறுவனர்  முகேஷ்முத்துராமுக்கு  பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம் என்று விருது வழங்கப்பட்டது. மேலும் விண்வெளித் துறையில் சிறந்த தொழில்முறை பங்களிப்பாளருக்கான விருதினை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது. இதனை விண்வெளி பொறியியல் துறையின் பேராசிரியர் ஆர்.கே.முத்துராமன் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாமின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் இந்த முயற்சி, புதுமையான கண்டுபிடிப்புகள், தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்ப மேம்பாடு, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இந்தியாவின் தொழில்நுட்பத் திறனையும் தற்சார்பையும் வலுப்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாக இந்நிகழ்வு அமைந்தது.

விருது பெற்ற பேராசிரியர் மற்றும் மாணவரை பல்கலைக் கழகத் துணைத் தலைவர், பதிவாளர், பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *