உரத்தநாடு, நவ. 3- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிட மாணவர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா, ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் த.செகநாதன் இல்லத்தில் 31.10.2026 அன்று மாலை ஆறுமணிக்கு எழுச்சி யோடு தொடங்கியது.
ஒன்றிய இளைஞரணித் தலைவர் ரெ.இரஞ்சித்குமார் வரவேற்புரையாற்றினார். ஆனந்தம் சட்டக்கல்லூரி மாணவர் செ.அன்பு வீரமணி தலைமை வகித்தார்.
தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், பொறியாளர் பாலகிருட்டிணன்,புலவர் இரா.மோகன்தாசு,மாவட்ட வழக்குரைஞரணிசெயலாளர் க.மாரிமுத்து ஆகியோர் முன் னிலை வகித்தார்கள்
சுயமரியாதை வீரர் எஸ்.சந்தோசு தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்.
பெரியார் பிஞ்சு மா.புனிதன், தந்தை பெரியார் பற்றி பாடல் பாடினார்,
திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் தொடக்கவுரையாற்றியதுடன், மா.புகழினிக்கு பெரியார் சிலையும், மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கி சிறப் பித்தார்
ஒன்றிய தலைவர் த.செக நாதன், ஒன்றிய துணைத் தலைவர் கு.நேரு, பொதுக்குழு உறுப்பினர் வடசேரி தீ.வ.ஞான சேகரன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்.
பெரியார்பிஞ்சு மா.புகழினி மாணவர்கள் தனது உரையில், தந்தை பெரியார், கொள்கையை ஏற்று,தமிழர்தலைவர் காட்டும் திசையில் செல்லவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
நிறைவாக சிறப்புரையாற்றிய இராம.அன்பழகன், தீபாவ ளிப் பண்டிகையின் ஆபா சங்களையும், தீபாவளியை புறக்கணிக்க வேண்டிய அவசியத்தையும், பல்வகை யான பொருளாதார இழப்புக ளையும் சுட்டிக்காட்டி சிறப்பு ரையாற்றினார்.
பெரியார் வீரவிளையாட்டுக் மாநிலச் செயலாளர் நா.இராம கிருட்டிணன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர் தென்னவை நித்திஷ் நன்றிகூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
