‘‘வாங்கும் திறனை அதிகரிக்க அரசு திட்டமிடவேண்டும் இதுதான் பொருளா தார வளர்ச்சிக்கு அடிப்படை செயல் பாடு’’ என்றார் அமர்த்தியா சென்.
அமர்த்தியா சென் இந்தியாவின் பெருமைமிகு பொருளாதார மேதை மற்றும் நோபல் பரிசு பெற்ற அறிஞராவார்.
இவர் 1933-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி சாந்திநிகேதனில் பிறந்தார்.
இவருக்கு “அமர்த்தியா” (அதாவது ‘அழியாதவர்’ அல்லது ‘அமரர்’) என்று பெயர் சூட்டியவர் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்!
1998-ஆம் ஆண்டு பொருளாதாரத் திற்கான நோபல் பரிசைப் பெற்றார். ‘நலன்புரி பொருளாதாரம்’ மற்றும் வறுமை/பஞ்சம் குறித்த இவரது ஆய்வுகளுக்காக இது வழங்கப்பட்டது.
வெறும் எண்களாகவும் வரைபடங் களாகவும் இருந்த பொருளாதாரத்தை, மனித நேயத்தோடும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையோடும் இணைத்து உலகிற்கு வழிகாட்டியவர். “பஞ்சம் என்பது உணவின்மையால் மட்டும் வருவதில்லை, அதை வாங்கும் திறன் மக்களிடம் இல்லாததாலேயே வருகிறது” என்ற இவரது கருத்து உலக அளவில் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இவரது ஒப்பற்ற சேவையைப் பாராட்டி 1999-ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருதை வழங்கி மரியாதை செய்தது.
