ஜே.என்.யு. முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கையில் இடஒதுக்கீடு புறக்கணிப்பா? மாணவர் அமைப்புகள் கேள்வி

1 Min Read
- Advertisement -

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள 711 வழக்கமான பிஎச்டி இடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பில், இட ஒதுக்கீட்டுக் கொள்கை மீறப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு விதியின்படி, அவர்களுக்காகக் குறைந்தது 53 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2026–2027-ஆம் கல்வி ஆண்டிற்கான பிஎச்.டி சேர்க்கை அறிவிப்பில் 38 இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன; இது சுமார் 15 இடங்கள் குறைவாகும்.

அதேபோல், பட்டியல் ஜாதியினருக்கான  15 சதவீத இட ஒதுக்கீட்டு விதியின்படி சுமார் 107 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், இந்த அறிவிப்பில் 103 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்தபட்சம் 36 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டிய சூழலில், இந்த அறிவிப்பில் 17 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த விதிமீறல்கள் தொடர்பாக, தேசியப் பழங்குடியினர் ஆணையத்திடமும், தேசிய பட்டியல் ஜாதியினர் ஆணையத்திடமும்  இந்திய மாணவர் சங்கம் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *