திருப்பத்தூரில் புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் விழா

திராவிடர் கழகம்

திருப்பத்தூர், மே 4 திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 136 ஆவது பிறந்தநாள் விழா நேற்று (3.5.2026) மாலை 5.30 மணியளவில் சாக்கியா அய்.ஏ.எஸ். அகடாமியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வே.அன்பு ( மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) தலை மையிலும். கோ.திருப்பதி (மாவட்ட பகுத்தறி வாளர் கழகச் செயலாளர்) வரவேற்பிலும், கே.சி.எழிலரசன் (மாவட்ட கழகத் தலை வர்), எ.அகிலா (மாநில மகளிரணி பொரு ளாளர்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத்தலைவர்), ஏ.டி.ஜி.சித்தார்தன் (மாவட்ட துணைச்செயலாளர்), சி.ஏ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), காளிதாஸ் (நகர தலைவர்), இரா.கற்பகவள்ளி (மாவட்ட தலைவர் மகளிரணி) ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் பெ.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) தொடக்கவுரையாற்றினார். சிறப்புரையாக அண்ணாசரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச்செயலாளர்), கவிஞர் நா. சுப்புலட்சுமி, வ.புரட்சி (மாவட்ட செயலாளர் விடுதலை வாசகர்வட்டம்), எம்.என்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம்), தீபஜோதி (மகளிர் பாசறை), லாவண்யா (மகளிர் பாசறை) ஆகியோர் உரையாற்றினர்.
அவர்கள் தம் உரைகளில், ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுவது போன்று, இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களிடம் தந்தை பெரியாரின் கொள்கைகளை மிக தீவிரமாக கொண்டுச் சேர்க்கவேண்டும். அவர் கொள்கையை முழுமையாக ஏற்று, அவர் சிந்தனைகளை கவிதை வடிவில் முழங்கிய தந்தை பெரியாரின் போர்க்கருவியாக விளங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களை கொண்டு சேர்க்க வேண்டும்.
மேலும் தனது 93 ஆவது வயதிலும் மீண்டும் தமிழ்நாட்டில் சமூகநீதிக் காவலர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அடுத்த சில நாட்களில் மாணவர்களுக்கான பெரியார் பயிற்சிப் பட்டறையில் எவ்வித அலுப்பும், சலிப்பும் இல்லாமல் பயிற்சி மேற்கொள்கிறார் என்றால், இவர் தான் நம் வழிகாட்டி, இவர்தான் தமிழனத்தின் தலைவர். இவரைப் போன்றோரை தான் இளைஞர்கள் முன் உதாரணமாகக் கொள்ளவேண்டும். அவர்களிடத்தில் இத்தகைய தலைவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சிறப்பு ரையாற்றினார்.
இனி ஒவ்வொரு ஆண்டும் மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் அன்று, கவிதைப் போட்டி நடத்தி புரட்சிக்கவிஞரின் பெயரில் விருது வழங்கி சிறப்பிக்கப்படும் என்று மாவட்டக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற கவிஞர் நா. சுப்புலட்சுமி, மாவட்ட கழக வளர்ச்சி நிதியாக ரூ.500, பெ.ரா.கனகராஜ் ரூ.200 வழங்கினர்.
3.5.2026 அன்று பிறந்தநாள் காணும் கோ.திருப்பதி நவநீதம் (மாவட்ட பகுத்த றிவாளர் கழகச் செயலாளர்) அவர்களுக்கு கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்) பய னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
இந்நிகழ்வில், பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத்தலைவர்), இராஜேந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), நவநீதம் (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்), சரவணன் (இலக்கிநாயக்கன்பட்டி கிளைத்தலைவர்), பச்சைமுத்து, (பிரபாகரன் கற்பிபயிலகம்) ஆகியோர் பங்கேற்றனர். க. இனியவன் (மாணவர் கழகம்) க. உதயவன், குறளமுதன் (மாணவர் கழகம்), சி.அதியன் (மாணவர் கழகம்), விஜயகுமார் (ஆசிரியர்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சு..குமரவேல் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர்) நன்றியுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *