எஸ்.அய்.ஆர். மூலம் நீக்கப்பட்ட சிறுபான்மையினரும், ஒடுக்கப்பட்டோரும் இனி சலுகைகளைப் பெறமுடியாதா? பஞ்சாயத்து ராஜ் சலுகைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.3 இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பலன்களைப் பெற இனி வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் என ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அறிவித் துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர், புதிய திட்டத்தின்கீழ் ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்ற முறை ரத்து செய்யப்பட உள்ள தாகத் தெரிவித்தார். இனி பயனாளிகள் பண பலன்களைப் பெற வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் பயோ மெட்ரிக் (Biometric) அங்கீகா ரத்தை வழங்குவதே ஒரே செல்லு படியாகும் அடையாளச் சான்றாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இதுவரை பயன்பாட்டில் இருந்த ஆதார் இனி அடையாள முறையாகக் கருதப்படாது என்றும், அதற்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் அடிப்படையில் மட்டுமே நிதி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களை ஒருங்கிணைத்து புதிய டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

16-ஆவது நிதி ஆணையத்தின் ஒதுக்கீட்டை நிறைவு செய்ய பஞ்சாயத்துகள் உள்ளூர் வளங்கள் மூலம் சொந்த வருவாயைப் பெருக்க வேண்டும் என்றும், நிதி ஆணையத்தின் 20 சதவீத நிதி பஞ்சாயத்துகளின் செயல்பாட்டுத் திறனுடன் இணைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அண்மையில் பிரதமர் தலை மையிலான அமைச்சரவைக் குழு, ‘ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான்’ திட்டத்திற்குப் பதிலாக ‘பிரதான் மந்திரி விக்சித் கிராம் ஸ்வராஜ் யோஜனா’ என்ற புதிய ஒன்றிய நிதியுதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

நாட்டில் 77 சதவீத மக்கள் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் மூலம் நேரடிப் பலன்களைப் பெற்று வரும் நிலையில், இந்த புதிய அறிவிப்பும், வாக்காளர் உரிமைகள் பறிக்கப்படுவதாக எழும் கவலைகளும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

எஸ்,அய்.ஆர். மூலம் இந்தியா முழுவதும் சுமார் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்காளர் உரிமை பறிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆவார்கள் இந்தச்சூழலில் சலு கைகளைப் பெற வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என்ற அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *