கருநாடகாவில் பா.ஜ.க. நிர்வாகிக்கு ஒரே நாளில் 4 வாக்காளர் அட்டைகள்! தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் கடும் தாக்குதல்!

1 Min Read
- Advertisement -

பெங்களூரு, நவ. 3- காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கருநாடக மாநிலத்திலேயே, பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கு வெவ்வேறு பெயர்களில் நான்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப் பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ஊரக நாடாளு மன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெங்களூரு தெற்கு சட்டமன்றத் தொகுதியின் வரைவு வாக்காளர் பட்டியலில் பாஜக பிரமுகர் அபிஷேக் கே.என். என்பவர் தனது பெயர் விடுபட்டுள்ளது என்று கூறி ஒரே நாளில் நான்கு முறை புதிய வாக்காளர் சேர்க்கைக்கான ‘படிவம் 6’ சமர்ப்பித்துள்ளார்.

தற்போது வெளியிடப் பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், அவரது விண்ணப் பங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நான்கு வெவ்வேறு வாக்காளர் அடையாள எண்கள் வழங்கப் பட்டுள்ளன.

இந்நிகழ்வு குறித்து அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை  காங்கிரஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்:

ஒரே நபரிடமிருந்து வரும் பல விண்ணப்பங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான எவ்வித தொழில் நுட்ப அமைப்பும் தேர்தல் ஆணையத்திடம் இல்லையா?

ஒரே நாளில் அளிக்கப்பட்ட நான்கு விண்ணப்பங்களும் அதிகாரி களின் பரிசீலனை செய்யாமல் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றது எப்படி?

போலி மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுருக்க முறை திருத்தம்) நடவடிக்கை, மாறாக மேலும் பல போலி பதிவுகளை உருவாக்கவே வழிவகுத்துள்ளதா?

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நிலை என்ன?

“காங்கிரஸ் ஆளும் கருநாடகா விலேயே தேர்தல் ஆணைய அதிகாரிகளின் அலட்சியத்தால் இவ்வளவு பெரிய மோசடி மற்றும் முறைகேடு நடைபெறுகிறது என்றால், பாஜக நேரடியாக ஆளும் மாநிலங்களில் வாக் காளர் பட்டியல் சேர்க்கை எந்த அளவுக்கு முறைகேடாக நடந்தி ருக்கும்?” என்ற கேள்வியையும் எதிர்க்கட்சியினர் முன்வைத்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *