மும்பை, நவ. 3 மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாட வலியுறுத்தி, பாலிவுட் நடிகை நடித்த விழிப்புணர்வு காட்சிப் பதிவை மும்பை மாநகராட்சி வெளியிட்டிருந்தது.
மும்பையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நடிகை தியா மிர்ஸா முன்னதாக நீட் தேர்வு விவகாரம் தொடர்பா கப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இதைக் சுட்டிக்காட்டி பாஜக தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாஜகவினரின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து, மும்பை மாநகராட்சி அந்த விழிப்புணர்வு காட்சிப் பதிவை அதி காரப்பூர்வமாக நீக்கியுள்ளது.
