அகமதாபாத், நவ. 3- குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் விஞ்சியா கிராமத்தில், தந்தை ஒருவர் தனது 10 வயது மகனை வீட்டின் பூஜை அறையிலேயே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, உடலின் அருகிலேயே உறங்கிய அதிர்ச்சி நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விவசாயக் கூலித் தொழிலாளியான நரேஷ் பட்டேல் என்பவருக்கும், அவரது மனைவி பாரதிபென்னுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 1.11.2026 அன்று இரவு நரேஷ் பட்டேல் தனது ஒரே மகனான கரணுடன் (வயது 10) வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, தான் வழிபடும் கடவுளின் பீடத்தில் சிறுவனின் தலையை 2 முதல் 3 முறை கொடூரமாக மோதி, கட்டையால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
அதன்பின், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனின் உடலை ஒரு கட்டிலில் கிடத்திவிட்டு, அதன் அருகிலேயே தானும் சென்று உறங்கியுள்ளார். இந்நிகழ்வு குறித்து அண்டை வீட்டார் அளித்த தகவலின் பேரில் ஓடிவந்த தாய் பாரதிபென், ரத்தக் கறைகளுடன் கிடந்த மகனின் உடலையும் கணவனையும் கண்டு அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, நரேஷ் கைது செய்யப்பட்டார்.
“தனது தந்தைக்குப் பிறகு குடும்பத்தின் பாரம்பரிய பூசாரியாக தான் மாறிவிட்டதாகவும், இனி எதிர்காலத்தில் தங்கள் குடும்பத்தில் யாரும் பூசாரியாக மாறக்கூடாது என்பதற்காகவே ஒரே மகனைப் பலிகொடுத்துவிட்டதாகவும்” கூறியதாகக் காவல்துறை எஃப்.அய்.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு குறித்து வழக்குப் பதிவு செய்த சானந்த் காவல் துறையினர், நரேஷ் பட்டேலைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
