சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம்!

5 Min Read
- Advertisement -

பேராசிரியர் கலையரசன் அதிகாலையில் கைது!
மன்னிப்புக் கேட்பது வேறு; தவறுக்குப் பொறுப்பேற்பது என்பது வேறு!
விமர்சனங்களுக்குக் கைது நடவடிக்கையைப் பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல!

சென்னை, நவ. 3–  சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. கவுன்சிலர் சுதா தீனதயாளன் பிணை கோரிய வழக்கில் பேராசிரியர் கலையரசன் அதிகாலையில் கைது செய்யப்பட்டது குறித்து நீதிபதி கருத்து தெரிவிக்கையில், விமர்சனங்களுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல என்றும், மன்னிப்பு கேட்பது வேறு! தவறுக்குப் பொறுப்பேற்பது என்பது வேறு! என்றும் த.வெ.க. அரசுக்கு காட்டமான கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் தி.மு.க. கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், அவருக்கு முன்பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 95 ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், மகளிர் அணி நிர்வாகியுமான டி.சுதா தீனதயாளன், கடந்த அக்.7 ஆம் தேதி சென்னை – ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில், முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து பேசினார்.

அதனையொட்டி, பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், தனக்கு முன்பிணை கோரி சுதா தீனதயாளன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி
என்.ரமேஷ் முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அ.தாமோதரன், ‘மனுதாரருக்கு தற்போது 60 வயதாகிறது. இதற்கு முன்பாக அவர் மீது எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை. முதலமைச்சர் குறித்த தனது பேச்சுக்காக அவர் ஏற்கெனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். எதிர்காலத்திலும் கவனத்துடன் பேசுவதாக உறுதியளித்துள்ளார்’ என்றார்.அரசு தரப்பு வழக்குரைஞர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ரமேஷ் பிறப்பித்துள்ள விரிவான உத்தரவின் விவரம் வருமாறு:

‘அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்கும், பேச்சுரிமைக்கும் அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள பாதுகாப்பை புறம்தள்ளி, கைது நடவடிக்கையை ஒரு தண்டனை வழங்கும் கருவியாக ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அரசியல் ரீதியாக எழும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல் துறையை ஆயுதமாக்கி கைது நடைமுறையை மேற்கொள்ளக்கூடாது.

அவதூறாகப் பேசுவது மட்டுமே அமைதிக்குக் குந்தகம் ஆகிவிடாது!

ஆட்சியில் இருப்பவர்களின் செயல்பாடு களை விமர்சிப்பதும், கேள்வி எழுப்புவதும் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம். அரசியல் தலைவரை விமர்சிப்பது அல்லது அவதூறாகப் பேசுவது மட்டுமே பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் குற்றமாகி விடாது. அந்தப் பேச்சு வன்முறையைத் தூண்டும் விதத்தில், உண்மையிலேயே பொது அமைதிக்கு குந்தகம் ஏற்ப டுத்தினால் மட்டுமே அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பேச்சுரிமைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் அரசி யலமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முதலமைச்சர் குறித்துமனுதாரர் அவதூறாக பேசியிருந்தால் அதற்காக அவதூறு வழக்குத் தொடரலாம். அதை விடுத்து, அரசியல் உள்நோக்கத்துடன் வேறு குற்றப்பிரிவுகளைப் பயன்படுத்தி காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பது சட்ட நடைமுறைகளை தவிர்ப்பது போலாகிவிடும்.

தற்போதுள்ள சூழலில், நாட்டில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் அரசியல் விவாதங்கள் பெருமளவில் சமூக வலைதளங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் சமூக வலைதளப் பிரிவுகளை நிர்வ கித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளப்பிரிவு, எதிர்க்கட்சி யினரை விமர்சிப்பதும், கேலி, கிண்டல் செய்வதும், அவதூறாகப் பேசுவதும் தொடர்கதையாக உள்ளது.

ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான புகார்க ளிலும், எதிர்க்கட்சியினருக்கு எதிரான புகார்களிலும் காவல்துறை ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். காவல் துறை அரசுக்குத்தான் சேவை செய்கிறதேயன்றி, ஆளுங்கட்சிக்கு சேவை செய்யவில்லை. குறிப்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்தப் பாகுபாடும் இன்றி காவல்துறை செயல்பட வேண்டும்.

காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை!

அதேபோல ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு காணொலியாகவும், ஆவணமாகவும் உள்ள பேச்சு தொடர்பான வழக்குகளில், விசார ணைக்காக மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையோ திருப்திப் படுத்தும் நோக்கில் கைது நடவடிக்கை இருக்கக்கூடாது.

‘‘எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டால், சில மணி நேரங்க ளிலேயே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், அதுவே ஆளுங்கட்சி யினர் என்றால், வழக்குப் பதிவு செய்வது கூட இல்லை’’ என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆட்சியின்போதும் எழுந்து கொண்டிருக்கிறது. காவல்துறையினரின் நடவடிக்கை களைப் பொதுமக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சி களுக்கும் இடையே காவல் துறை ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது காவல் துறை வழங்கும் சலுகையோ, மரி யாதையோ அல்ல. அது அரசிய லமைப்புச் சட்ட ரீதியாக காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள அடிப்படை நிபந்தனையாகும்.

பேராசிரியர் கைதில் அத்துமீறல்!

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்து பதிவிட்டதாகக் கூறி அண்மையில் அதிகாலை நேரத்தில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஒருவர் சாதாரண உடையில் வந்த காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த சமூக வலைதளப்பதிவு அவரது ஒளிப்படத்தை பயன்படுத்தி உரு வாக்கப்பட்ட போலியான கணக்கு என்பது தெரிந்ததும், அன்றைய நாளே அவர் விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் தலைமைச் செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டு முதலமைச்சருடன் சந்திக்கிறார். தவறு நடந்துவிட்டது என்பதை அமைச்சர் ஒருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அதிகாலை வேளையில் ஒருவரை கைது செய்ய முற்படும்போது, அந்த சமூக வலைதளப் பதிவின் உண்மைத் தன்மை குறித்து ஏன் சரிபார்க்கவில்லை. இதற்காக அந்த காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல!

மன்னிப்பு கேட்பது வேறு, தவறுக்கு பொறுப்பேற்பது வேறு. செல்வாக்கும், புகழும் உள்ள ஒருவருக்கு உடனடியாக நிவார ணம் கிடைக்கலாம். இதுவே சாதாரண குடிமகன் என்றால் அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது. அவர் தவறான புகாரில் கைது செய்யப்பட்டால் சிறை – நீதிமன்றக் காவல் என நீண்டகால வழக்கு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்பதை காவல்துறையினர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். உயர் பதவிகளில்இருப்பவர்கள் அரசியல் ரீதியாக எழும் விமர்ச னங்களையும்,கேலிகளையும், எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். விமர்ச னங்களுக்கு கைது நடவடிக்கை யைப் பயன்படுத்துவது ஜனநாய கத்துக்கு உகந்ததல்ல!

ஒருவரின் சுதந்திரமான பேச்சுரி மையைப் பறிக்கும் நோக்கில் நீதி மன்றங்கள் நிபந்தனை விதிக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு முன்பிணை வழங்குகிறேன். மனுதாரர் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள 7 ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரூ.25 ஆயிரம் பிணைத்தொகையுடன், அதே தொகைக்கு இருநபர் பிணை உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *