பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் தொடர் அழுத்தத்தைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ளன!

- Advertisement -

புதுடில்லி, நவ 01 இணைய வணிகத் தளங்களில் சிறு வணிகர்கள் எளிதாகப் பதிவு செய்யும் முறை, கூடுதல் தொகைக்கான தானியங்கி பணத் திருப்பியளிப்பு உள்ளிட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் இன்று (நவம்பர் 1) முதல்   நடைமுறைக்கு வந் துள்ளன.

 புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின்
முக்கிய அம்சங்கள்:

சிறு வியாபாரிகளுக்கு எளிய பதிவு முறை: தனி அலுவலகங்கள் இன்றி, பல்வேறு மாநிலங்களில் இணைய வணிகத் தளங்கள் மூலம் வணிகம் செய்யும் சிறு வியாபாரிகளின் மாதாந்திர ஜிஎஸ்டி மதிப்பு ரூ.2.50 லட்சம் வரை இருந்தால், அவர்கள் தாங்கள் வர்த்தகம் செய்யும் ஒரு மாநிலத்தில் உள்ள இணைய வணிகத் தளத்தின் கிடங்கு முகவரியை முதன்மை முகவரியாகப் பதிவு செய்யலாம்.

குறிப்பிட்ட அந்த முகவரியை மட்டும் அதிகாரிகள் நேரடியாகச் சரிபார்த்தால் போதுமானது. மேலும், அந்த முகவரிக்கு மட்டும் ஆதார் சரிபார்ப்பு நடைமுறை மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் சிறு வியாபாரிகள் தாங்கள் வணிகம் மேற்கொள்ளும் ஒவ்வொரு மாநிலத் திலும் தனித்தனி யாகக் கிடங்கோ அலுவல கமோ அமைக்க வேண்டிய கட்டாயம் தவிர்க் கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுமார் ரூ.9.50 லட்சம் சிறு வியாபாரிகள் இதனால் பயன டைவார்கள்.

விண்ணப்பங்கள் நிராகரிப்பு குறைவு

ஜிஎஸ்டி தளத்தில் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை ஜிஎஸ்டி துறை வெளியிட்டுள்ளதால், வியாபாரிகளின் விண்ணப் பங்கள் நிராகரிக்கப்படுவது பெருமளவு குறையும்.

தானியங்கி பணத் திருப்பியளிப்பு கூடுதல் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி தொகைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், இனி எந்தவொரு அதிகாரியின் தலையீடும் இன்றி கணினி வழியாகத் தானியங்கி முறையில் உடனடியாகப் பணம் திருப்பியளிக்கப்படும்.

விதிகளில் தளர்வு

வியாபாரிகள் விற்பனைக்குப் பிந்தைய தள்ளுபடி மீதான வரிக்கு இனி முன்கூட்டியே ஒப்பந்தம் மேற்கொள்ளத் தேவையில்லை. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடி வழங்கலாம்; அதற்கான ரசீதுகளை இணைக்கும் நடைமுறைகளிலும் எளிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *