சிறையில் பாதுகாப்பு குளறுபடிக்கு என்ன காரணம்? வெளியானது புதிய தகவல்

- Advertisement -

மதுரை, நவ.1  தேனி தேக்கம்பட்டி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தால், மதுரை மத்திய சிறை காவலர்களின் பணி நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவலர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அரசாணைப்படி 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும். ஆனால் மதுரை சிறை காவல்துறை துணைத் தலைவரும் கண்காணிப்பாளரும் தன்னிச்சையாக 12 மணி நேரம் வேலை வாங்குவதாக காவலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுபற்றி கூறியதாவது:  தற்போது தேனி, விழுப்புரம், தருமபுரி சிறைகளில் மட்டுமே கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடம் உள்ளது. மற்ற சிறைகளில் முன்பு இருந்தது. ஆனால் அதற்கான பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படாததால் 2019இல் ‘தேவை இல்லை’ என அரசிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டு, அதற்கு பதில் ஜெயிலர்கள் நியமிக்கப்பட்டனர். ஜெயிலர் ஒவ்வொரு முறையும் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் கேட்க வேண்டியிருக்கிறது. இதனால் சிறைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

தேனி சிறையில் 3 உதவி சிறை அலு வலர்கள் பணியில் இருந்தும் அவர்களில் ஒருவரை இரவு அதிகாரியாக நியமிக்காதது யாருடைய தவறு? சிறைவிதிப்படி உதவி சிறை அலுவலரே புதிய கைதிகளை சிறைக்குள் அனுமதிக்க முடியும். அந்த இடத்தில் தலைமைக் காவலரை இரவு அதிகாரியாக நியமித்தது யார்? இதற்கெல்லாம் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சிறைத்துறையை சீர்த்திருத்த வேண்டும்; எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக்கருதிய காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோரை பணியிடம் மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எங்களுக்கு மீண்டும் 8 மணி நேர வேலை வழங்க வேண்டும். மாவட்ட சிறைகளில் மீண்டும் கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *