ஆர்.எஸ்.எஸ்.சின் இரட்டை வேடம் பாரீர்! அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புப் பதிவு

1 Min Read
- Advertisement -

வாஷிங்டன், அக்.31 ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் அமெரிக்காவிற்குச் சென்றார். இந்தப் பயணத்தில் அமெ ரிக்காவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ (RSS Friends) என்று அழைத்துக் கொள்ளும் ஒரு குழு, அமெரிக்க நீதித்துறை அமைச்சகத்திடம், இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘அந்நிய முகவராக’ (Foreign Agent) பதிவு செய்துள்ளதாக, அந்நாட்டின் வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டம் (Foreign Agents Registration Act – FARA) தொடர்பான ஆவ ணங்கள் மூலம் தகவல்கள் வெளி யாகியுள்ளன. ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ அமைப்பின் அமெரிக்கத் தலைமை முகவரியாக ஜார்ஜியா மாநிலத்தின் பீச்ட்ரீ கார்னர்ஸ் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பதிவு இல்லை

ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் தன்னை ஓர் அமைப்பாக இது வரை பதிவு செய்யவில்லை. பதிவு செய்யப்படாத தன்னார்வக் கலாச்சார அமைப்பு என்ற அடை யாளத்துடனேயே இன்றுவரை தொடர்கிறது. அரசாங்கத்தின் தணிக்கை, நிதி வரவு-செலவுத் தகவல்களைச் சமர்ப்பித்தல்மற்றும் உறுப்பினர்களின் விவரங்களைப் பகிர்தல் போன்ற சட்டப் பொறுப்பு களுக்கு உட்பட வேண்டியிருக்கும் என்பதால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் பதிவைத் தவிர்த்து வருவதாக நீண்டகால விமர்சனங்கள் உள்ளன.

ஆனால், மற்ற நாடுகளில் அமைதியாக ஒரு துணை அமைப்பாகப் பதிவு செய்துவருவது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. உலகளவில் சுமார்
40-க்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாகக் கிளைகளுடனும்,
50-க்கும் மேற்பட்டநாடுகளில் துணை மற்றும் நட்பு அமைப்புகளு டனும் ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *