எத்தனை காலத்துக்குதான் பொய் வழக்குகளை எதிர்கொள்ளுவது? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்!

- Advertisement -

புதுவை, அக்.31 புதுக்கோட்டை நகர் மன்றத்தில் திமுக சார்பில் நேற்று (30.10.2026) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றுவிட்டு செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது எந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாலும், அது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் செயல்ப டுத்தப்பட்ட திட்டம் தான். இதே போல திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் திறந்து வைக்கப் போகிறார். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதாகும். விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் எப்போது அனுமதி அளிக்கிறதோ அப்போதுதான் இடைத்தேர்தல் நடைபெறும். எப்போது இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அதில் வெற்றி பெறப்போவது திமுக வேட்பாளர் தான்.

தமிழ்நாட்டு மக்கள், த.வெ.க. ஆட்சியில் ஏமாற்றத்தைச் சந்தித்து விட்டனர். உதய சூரியன் பிரகாசிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் தயார் செய்து விட்டோம். தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் விலைவாசி உயர்வு, காணாமல் போகும் சிறுமிகள் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் தடுமாறுவது உள்ளிட்டவற்றை கண்டு கோபத்தில் உள்ளனர். அதன் வெளிப்பாடு இடைத்தேர்தலில் தெரியும். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் திமுக பொறுப்பா ளர்கள் தவெகவில் இணைந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, உள்ளடி வேலை பார்த்தவர்கள் தற்போது வெளிப்படையாக கட்சியை விட்டு விலகி உள்ளனர்

நல்ல ஆட்சியை விஜயால் தரமுடியவில்லை

இதைப்பற்றி திராவிட முன்னேற்ற கழகம் கவலைப்படவில்லை. துரோகிகளை எங்களுடன் வைத்துக்கொள்ள மாட்டோம். தமிழக வெற்றிக் கழக அரசு அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. நல்ல ஆட்சியை விஜயால் தர முடியவில்லை. மக்களி டமிருந்து இந்த அரசு வெறுப்பை சம்பா தித்துள்ளது. இவை எல்லாம் மடை மாற்று வதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்து சோதனைகள் நடத்தி வருகின்றனர். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பழி போட்டுள்ளனர். அவைகளை தூள் தூளாக நீதிமன்றத்தின் மூலமாக நாங்கள் நிரூபித்து வெற்றி காண்போம்.

பொய் வழக்குகளுக்கு எதிராக வழக்குகள்

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஆவ ணங்களை கண்டுபிடித்துள்ளதாக கூறி னாலும் அவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நிரூபிக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் திமுகவினர் மீது பல்வேறு வழக்குகள் போட்டனர். அதனை தூள் தூளாக நொறுக்கி நிரபராதி என்று நிரூபித்து உள்ளோம். முதலமைச்சர் எந்தப் பைலை ஓபன் செய்தாலும், நாங்கள் நிரபராதி என்று நிரூபித்தே தீருவோம். எவ்வளவு காலத்துக்குத் தான் நாங்கள் பொய்யான வழக்குகளை எதிர்கொள்வது. இனி நீதி மன்றத்தில் எதிர் வழக்குத் தொடுக்கப் போகிறோம் என்று தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *