கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.10.2026

3 Min Read
- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘மக்கள் குற்றப்பிரேரணை’ – மீரா குமார் தலைமை! முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமை வகிக்க, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

* தமிழ்நாட்டில் பிப்ரவரி–மார்ச் மாதங்களில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு; ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு! ஜாதிவாரிக் கணக்கெடுப்புடன், குடும்ப வருமானம், தொழில், நில உடைமை, கல்வி, இடைநிற்றல் உள்ளிட்ட சமூக பொருளாதார விவரங்களும் சேகரிக்கப்படும். ஒன்றிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் மாநில அரசின் சமூக நீதிக் கணக்கெடுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* என்.சி.எல்.டி. மற்றும் அதன் தலைமை அமைப்பான என்.சி.எல்.ஏ.டி. (NCLT, NCLAT) அமைப்புகளை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதற்கு – உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்! இந்த அமைப்புகளின் நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு, அவற்றின் சுயாட்சியை பறித்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

* டிஜிட்டல் மோசடி இழப்புகளுக்கு வங்கிகளே பொறுப்பு – உச்சநீதிமன்றம்! டிஜிட்டல் மோசடிகளால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு வங்கிகள் பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

* வங்கிகளின் புதிய கே.ஒய்.சி. (KYC) விதிமுறைகளை ஆய்வு செய்யும் உச்சநீதிமன்றம்! வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் வகையில், புதிய விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் முறையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மருத்துவக் கனவும் கண்ணியத்திற்கான போராட்டமும்: இந்தியாவின் முதல் தாழ்த்தப்பட்ட திருநங்கை மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றார்! திருநங்கையாக தன்னை வெளிப்படுத்தியதால் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டாக்டர் கொய்யாலா ரூத் ஜான் பால், அம்பேத்கரின் கொள்கைகளால் உந்தப்பட்டு எம்.டி. (அவசரகால மருத்துவம்) பட்டம் பெற்றார். இருப்பினும், தனது பாலின அடையாளத்திற்கு அரசு அங்கீகாரம் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜனநாயகத்தைக் காப்பாற்ற  நவம்பர் 1 ‘சலோ டில்லி’ பேரணியில் இணையுங்கள் – ராகுல் காந்தி அழைப்பு! ‘சலோ டில்லி’ பேரணி நாட்டிற்காக நடைபெறும் தனித்துவமான போராட்டம் எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அரசியல் வேறுபாடுகளை கடந்து மாணவர் அமைப்புகள் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி இந்து:

* டெல்லியில் நீண்டகாலமாக வாக்களித்து வரும் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை நீக்க பாஜக முகவர்கள் மனு! முஸ்தபாபாத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி, பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் (BLA) படிவம் 7-அய் அதிக அளவில் தாக்கல் செய்துள்ளனர்.

* ‘டபுள் இன்ஜின்’ ஆட்சிக்கு இரட்டைத் தோல்வி – அகிலேஷ் விமர்சனம்; 11 எம்.எல்.சி. இடங்களில் 5-அய் சமாஜ்வாதி கைப்பற்றியது! வாரணாசி பட்டதாரிகள் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கையிலும் பாஜக தோல்வியடைந்தது 2027 தேர்தலுக்கான முன்னோட்டம் என அகிலேஷ் குறிப்பிட்டார்.

* ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி மற்றும் படித்த வேலையற்ற இளைஞர்கள் மீதான பாஜகவின் கொள்கைகளுக்கு மக்கள் அளித்த தீர்ப்பே இத்தோல்வி என்றார்.

* பசுவதை வழக்கு: மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி மூவருக்கு ஆயுள் தண்டனை! மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய நீதிபதி, பசு பொருளாதார வளத்திற்கும் தர்மத்திற்கும் அடையாளமாக கருதப்படுவதாக குறிப்பிட்டார்.

* டிசம்பர் 1 முதல் வீடுவீடாக கணக்கெடுப்பு: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பயிற்சி: ஜாதி விவரங்களைக் கேட்பதில் எச்சரிக்கையாக இருக்க கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்! ஓபிசிக்களுக்குத் தனிப் பிரிவு கிடையாது என்றும், ஜாதி மற்றும் ஆதார் விவரங்களை கேட்கும்போது நிதானமும் உணர்வுப்பூர்வ அணுகுமுறையும் அவசியம் என்றும் பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர்.

தி டெலிகிராப்:

* மேற்கு வங்கத்தில் 16 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் சமூக ஆர்வலர்கள் சரமாரி கேள்விகள்! யோகேந்திர யாதவ், அஞ்சலி பரத்வாஜ், நேஹா போரா, பிரசாந்த் பூஷன் ஆகியோர் எஸ்.அய்.ஆர் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* “வாரணாசி முதல் நாக்பூர் வரை”: மோடி அரசின் கொள்கைகளை மக்கள் நிராகரிக்கின்றனர் – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்! வாரணாசி, நாக்பூர் ஆகிய இடங்களில் பாஜக தோல்வியடைந்ததற்கான காரணங்களை மோடி ஆராய வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையின்மை, தனியார் முதலீடு சரிவு ஆகிய மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *