டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியா கூட்டணி கூட்டம் – திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகள் பங்கேற்கவில்லை; தேர்தல் ஆணையத்தின் எஸ்.அய்.ஆர். நடவடிக்கைக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம் நடத்துவது குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர்.
* ‘வாக்குத் திருட்டு’ எதிர்ப்புப் போராட்டம், இந்தியா கூட்டணி அறிவிப்பு: தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக அக்டோபர் 2 முதல் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி டில்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “பிரதமர் மோடி சமூகநீதிக்கு எதிரானவர்; அவரது முழு அமைப்பும் கல்வியை வெறுக்கிறது” என ராகுல் குற்றச்சாட்டு. உயர்கல்வி நிறுவனங்களில் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் படைப்புகள், பிரதமர் அலுவலக விசாரணைக்குப் பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக அவர் விமர்சனம்.
தி டெலிகிராப்:
* தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி அக்டோபர் 6-ஆம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி செல்ல இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு. எஸ்.அய்.ஆர். நடவடிக்கையின் முறைகேடுகளால் வாக்குத் திருட்டு நடந்ததாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பற்றி மம்தா விமர்சனம்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* என்.சி.இ.ஆர்.டி. பாடநூல்களில் ‘ராம ராஜ்யம்’: புதிய என்.சி.இ.ஆர்.டி. சமூக அறிவியல் பாடநூலில் ‘சத்யமேவ ஜயதே’, ‘ராம ராஜ்யம்’ உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளன. பண்டைய நூல்களையும் நவீன அரசமைப்புச் நிறுவனங்களையும் இணைத்து, ஜனநாயக ஆட்சிக்கு வழிகாட்ட வேண்டிய மதிப்புகள் மற்றும் பொறுப்புகளை பாடம் எடுத்துரைப்பதாக என்.சி.இ.ஆர்.டி. விளக்கம்.
– குடந்தை கருணா
