எளிய மக்களின் பிரச்சினைகள் மீது டிரம்ப் ஒருபோதும் கவனம் செலுத்தியதில்லை முன்னாள் அதிபர் ஒபாமா தாக்கு

- Advertisement -

ஜார்ஜியா, அக். 30- அமெரிக்க வாக்காளர்கள் மாற்றத்துக்காக ஏங்குவ தாகவும், அதிபர் டொனால்டு டிரம்ப் பல பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துள்ளதாகவும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங் கிரஸுக்கான (நாடாளு மன்றம்) இடைத்தேர்தல் நவ.3ஆம் தேதி நடை பெற உள்ளது. இதற்காக ஜார்ஜியா மாகாணத்தில் புதன்கிழமை (அக்.28) பிரச்சாரம் மேற் கொண்ட ஜனநாயக கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் அதிபருமான பராக் ஒபாமா, “தற்போதைய ஆட்சியாளர்கள் தீவிர மானவர்கள் அல்ல. அதற்கான விலையை நாம் அனைவரும் கொடுக்கி றோம்.

எனது உரையைக் கேட்டு நீங்கள் இங்கு ஆர்ப்பரிக்கிறீர்கள். உங்கள் கூச்சல்களை அவர்களால் கேட்க முடியாது. ஆனால், உங்கள் வாக்கை அவர் களால் கேட்க முடியும்.

அதிபர் பதவியைப் பயன்படுத்தி டொனால்டு டிரம்ப் லாபம் ஈட்டுகிறார். சலுகைகளை விற்பதில் இவ்வளவு முனைப்புடன் இருக்கும் ஓர் அதிபரை நாம் கண்டதில்லை. அவர் பதவியில் இருந்த காலத்தில் பல பில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். நவீன காலத்தில் இது போன்றதொரு நிகழ்வு நடந்ததில்லை.

அமெரிக்க வாக்கா ளர்கள் மாற்றத்துக்காக ஏங்குகிறார்கள். புதிய மாற் றத்துக்காகவும், மேம்பட்ட சூழலுக்காகவும் மிகுந்த தாகத்துடன் மக்கள் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் மாற்றத் துக்கான சூழல் நிலவுவதை உணர முடிகிறது.

எளிய மக்களின் பிரச்சினைகள் மீது ட்ரம்ப் ஒருபோதும் கவனம் செலுத்தியது இல்லை. அவரது அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கடைசி வாய்ப்பு இந்த தேர்தல். இதை பயன்படுத்தி ஜனநாயக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய் வோம்” என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *