வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துங்கள் பிரதமர் மோடிக்கு பவன் கெரா வலியுறுத்தல்

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 30– வாக்குச்சீட்டு முறையில் மக்களவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்திட பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகக் குழுத் தலைவர் பவன் கெரா வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

“தேர்தல் முடிவுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இ.வி.எம்) தாக்கம் எதுவும் இல்லையென்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக நம்பினால், அதை வெறும் பேச்சால் அல்லாமல் செயல் மூலம் நிரூபிக்க வேண்டும். அதன் மூலம் தேர்தலில் பாஜக-வின் பலத்தை அவர் நிரூபிக்கட்டும். அந்த வகையில் இனி வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை வாக் குச் சீட்டு முறையில் நடத்த உறுதி அளிக்க வேண்டும்.

மேலும், எஸ்அய்ஆர் நடைமுறையை ரத்து செய்வதோடு முறைகேடாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 13.3 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்குங்கள். அவருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்யுங்கள்.

இதையெல்லாம் அவர் செய்யும் வரை, அவரது வாதங்கள் அனைத்தும் வெற்றுப்பேச்சு தான். அதை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று பவன் கெரா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேசம், மகாராட்டிரா, பீகார் மற்றும் கருநாடகாவில் 28 மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வென்று இருக்கும் என ஊகியுங்கள் என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் பவன் கெரா பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *