பூட்டானில் பனி ஏரி உடைப்பு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதிக்குச் சிவப்பு எச்சரிக்கை

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 30- பூட்டானின் லெம்தாங்க் பகுதியில் பனி ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

லெம்தாங்க் பகுதியில் பனி ஏரி உடைந்ததை அடுத்து அதில் இருந்து வெளியேறும் நீர், மோ சு (Mo Chhu) நதி வழியாக சங்கோஷ் நதியை நோக்கி பாய்ந்து வருகிறது. இதனால், டார்ஜிலிங் மலைப்பகுதிகள், தெராய், துவார்ஸ் பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக ்கொள்ளப்பட்டுள்ளனர்.

டார்ஜிலிங் தொகுதி பாஜக நாடாளு மன்ற உறுப் பினர் ராஜு பிஸ்தா, சங்கோஷ் நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங் களுக்குச் செல்லுமாறு தனது சமூக ஊடக பதிவின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்கு வங்க அமைச்சர் நிசித் பிரமாணிக் கூறுகை யில், “மாநில பேரிடர் மேலாண்மைக் குழு முடுக்கி விடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்து வந்து கொண்டிருக் கிறது. மேலும், பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் இருக்குமாறு தன்னார் வலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார்கள். வெள்ள நீர் அடுத்த அய்ந்து முதல் ஆறு மணி நேரத்துக்குள் சமவெளிப் பகுதிகளை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அப் பகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.” என தெரிவித் துள்ளார்.

அலிபுர்துவார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஷா, “மக்கள் பீதியடைய வேண்டாம். பூட்டான் அதிகாரிகள் மற்றும் பல்வேறு பேரிடர் மீட்பு அமைப்புகளுடன் இணைந்து நிலையை தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது.

மாநில பேரிடர் மீட் புப் படை ஏற்கெனவே அப் பகுதியில் பணியமர்த்தப்பட் டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையும் அங்கு வந்து கொண்டிருக்கிறது. அவசரகால முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளுக்கு உதவ சிவில் பாதுகாப்பு பணியாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 4,000 முதல் 5,000 வரையி லான மக்கள் பாதுகாப்பான இடங் களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பள்ளி கட்டடங்கள் நிவாரண மய்யங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், 6,000க்கும் மேற்பட்ட மக்கள் பாது காப்பான இடங்களுக்கு இடம்பெயர உள்ளனர்.

நிவாரண மய்யங்களில் உலர்ந்த உணவுகள், குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை நிர்வாகம் செய்துள்ளது. நீர் ஓட்டத்தின் வேகம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், சங்கோஷ் நிதியால் பாதிப்பு ஏற்படக்கூடும் என கருதி சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *