விலைவாசி உயர்வைக் கண்டித்து ஒன்றிய, மாநில அரசுக்கு எதிராக நவ.3-இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

3 Min Read
- Advertisement -

சென்னை, அக். 30- அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஒன்றிய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நவம்பர் 3-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்ட அறிக்கையில், ‘நாடு முழு வதும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந் துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கருநாடகம் உட்பட தென் மாநிலங்களில் அரசி விலை கடுமையாக உயர்த்துள்ளது.

சன்னரக அரிசி உட்பட அரிசி ரகங்களின் விலை 50 விழுக்காடு வரை அதிகரித் துள்ளது. இதனால் சில உயர்தர அரிசி ரகங்கள் கிலோ ரூ.100 வரை விற்பனையாகின்றன. இந்த விலை ஏற்றம் காரணமாக ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.48-க்கு விற்கப் பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது ரூபாய் 72 வரை விலை உயர்ந்துள்ளது.

எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன் படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால் விலை உயர்ந்துள்ளதாக கூறப் படுகிறது. சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலப்பு என்ற ஒன்றிய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் ஆகும். தற்போது  விழாக் காலங்கள் நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரை தேவை அதிகரிக்கும். இந்நிலையில், அதன் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். சர்க்கரை விலை உயர்வால் உணவகங்களில் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வணிக நிறு வனங்களுக்கான சமையல் எரிவாயு உருளை விலை கடுமை யாக உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ, காபி விலை ரூ.20 முதல் 30 வரை உயர்ந்தது. தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்ந் துள்ளது.

கருநாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழ் நாட்டில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் பதுக்கல், இணைய வழி வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களால் இந்த விலையேற்றம் நடந்துள்ளது. பொன்னி அரிசி ரூபாய் 90-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இட்லி அரிசி ரூபாய் 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன. உளுத்தம் பருப்பு கிலோ ரூபாய் 120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு 80-லிருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ.250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசும் – மாநில அரசும் போர்க் கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் நியாய விலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் 03.11.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும். இதில் அனைத்துப் பகுதி மக்களும் கலந்து கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு கேட்டுக்கொள்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *